Friday, February 26, 2010

இரும்பு மனிதன்!

“பழைய இரும்புச் சாமான், ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்!”
-குள்ளமணி (படம்: கரகாட்டக்காரன்)

வணக்கம்,

தலைப்பை பார்த்து விட்டு அய்யம்பாளையத்தார் போன்ற அரசியல் சாட்டையடி வீரர்கள் இது ஏதோ இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபபாய் பட்டேல் குறித்த பதிவு என்று நினைத்து கொள்ள வேண்டாம் என கனிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்!

எந்திரன் திரைப்படம் எப்போது வெளிவரும் என தமிழ்நாடே ஏங்கிக் கிடக்கும் இவ்வேளையில், நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானதொரு இரும்பு மனிதன் குறித்த ஒரு சிறு முன்னோட்டப் பதிவைக் காண்போம்!

கடந்த ஃபிப்ரவரி 23-ம் தேதிதான் நமது ஃபேவரைட் இரும்பு மனிதன் ஆர்ச்சியின் பிறந்த நாள் ஆகும்! ஆம் 23-02-1952 அன்று வெளிவந்த LION வாரந்திர காமிக்ஸ் இதழின் முதல் இதழில் தான் முதன்முதலாக ஆர்ச்சி தோன்றி சாகஸம் புரிந்து நம்மைப் போல் உலகெங்கிலும் உள்ள என் போன்ற குழந்தைகளையும், குழந்தை மனம் கொண்டோரையும் கவர்ந்தது!

இதோ அந்த முதல் தோற்றத்தின் புகைப்படம்! உபயம்: வழக்கம் போல நண்பர் முத்து விசிறி! படத்தை ‘க்ளிக்’கி பெரிதாக்கிப் பார்த்து மகிழவும்!

Lion (22-02-1952) - Robot Archie

லயன் காமிக்ஸ் # 004 – இரும்பு மனிதன்! இதழில்தான் நமது அபிமான இரும்பு மனிதன் முதன்முதலாக சாகஸம் செய்தான்! இது குறித்த மேலும் சில சுவாரசியமான தகவல்கள் இதோ! நமது காமிக்ஸ்களில் வெளிவந்த முதல் ஆர்ச்சி கதைகளின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!

அட்டைப்படங்கள்:

Lion Comics # 004 - Irumbu ManidhanLion Comics (English Edition) # 2 - The Amazing Robot Archie

விளம்பரங்கள்:

Lion Comics # 004 - Irumbu Manidhan - Ad (Cover) Lion Comics # 004 - Irumbu Manidhan - Ad (Inside)

சிங்கத்தின் சிறுவயதில்:

ஆர்ச்சியின் தமிழ் அறிமுகம் குறித்து ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் கூறியிருப்பதையும் படியுங்கள்!

SS03-1(L192)SS03-2(L192)SS03-3(L192)

அரிய அட்டைப்படம்:

லயன் காமிக்ஸ் # 004 – இரும்பு மனிதன்! அட்டைப்படம் தயாரிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள்! இதோ அந்த உபயோகிக்கப்படாத அரிய அட்டைப்படம் உங்கள் மேலான பார்வைக்கு! உபயம்: நண்பர் ஹாஜா இஸ்மாயில்!

Lion#004 - Irumbu Manidhan - Alternate Cover

இத்தகைய அதியற்புத ஹீரோவை நமக்கெல்லாம் அறிமுகம் செய்து வைத்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

ஆர்ச்சியின் அதிரடி அட்டைப்படங்கள்:

நீங்கள் கண்டு மகிழ இதோ மேலும் சில ஆர்ச்சியின் அதிரடி அட்டைப்படங்கள்! அதிரடி ஆர்ச்சி, அதிசயத் தீவில் ஆர்ச்சி உள்ளிட்ட எனது ஃபேவரைட்கள் சிலது மிஸ்ஸிங்! மன்னிக்கவும்!

Lion Comics # 008 - Marma TheevuLion Comics # 013 - Nadhi  ArakanLion Comics # 015 - Kudhirai Veeran ArchieLion Comics # 016 - Ulaga Poril ArchieLion Comics # 024 - Thanga VettaiLion Comics # 025 - Kodai Malar '86Lion Comics # 030 - Yaar Antha Junior ArchieLion Comics # 031 - Deepavali Malar '86Lion Comics # 034 - Puratchi Thalaivan ArchieLion Comics # 036 - Kodai Malar '87Lion Comics # 045 - Archiekkor ArchieLion Comics # 047 - Marana PaniLion Comics # 087 - Archie in ParisLion Comics # 109 - Archieyodu ModhaadhaeLion Comics # 200 - Supplement

காமிக்ஸ் க்ளாசிக்ஸ்:

Comics Classics # 12 - Marma Theevu (Reprint)Comics Classics # 17 - Thanga Vettai (Reprint)

தமிழ் காமிக்ஸ் உலகில் ஆர்ச்சியின் தாக்கம் குறித்து பலரும் இப்போது குறைவாகவே, ஏன் கேவலமாகவே மதிப்பிடுகின்றனர்! ஆனால் ஆர்ச்சி உச்ச நாயகனாக திகழ்ந்த கால கட்டங்களில் அதன் பாதிப்பை சொற்களால் விவரிக்க முடியாது! ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் ஆர்ச்சியால் தனக்குக் கிடைத்த வெற்றிகளை இவ்வாறெல்லாம் பறைசாற்றியுள்ளார்!

Lion Comics # 067 - Emanukku Eman - Supplement - Lion Album - Front CoverLion Comics # 050 - Dragon Nagaram - Back

நமது அபிமான இரும்பு மனிதன் குறித்த  சிறப்பு ஆய்வுப் பதிவொன்று விரைவில் இடவிருகிறேன்! அதுவரை பொறுத்திருக்கவும்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

படங்கள் உபயம்:

தொடர்புடைய இடுகைகள்:

லயன் காமிக்ஸ் ஆங்கில வெளியீடுகள் குறித்து முத்து விசிறியின் முத்தான பதிவு:

லயன் காமிக்ஸ் சிறப்பிதழ்கள் குறித்து கிங் விஸ்வாவின் பதிவு:

சிங்கத்தின் சிறுவயதில் அனைத்து பாகங்களும் படிக்க:

Thursday, February 25, 2010

200!

வணக்கம்,

பதிவின் தலைப்பைப் பார்த்து விட்டு யாரும் இது 300 பருத்திவீரர்கள்-க்கு முன்னாடி வந்த திரைப்பட விமர்சனமோ என எண்ண வேண்டாம்!

நேற்று நிகழ்ந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்!

இச்சாதனையை பாராட்டும் விதமாக நமது காமிக்ஸ்களின் இருநூறாவது இதழ்கள் சிலவற்றின் அட்டைப் படங்கள் இதோ உங்கள் மேலான பார்வைக்கு!

முத்து காமிக்ஸ்:

ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு வெளிவந்த மிக மொக்கையான சிறப்பிதழ் இதுதான் என்பது எனது கருத்து! இது குறித்து விரைவில் ஒரு பதிவிடுகிறேன்! அதில் நெடுநாட்களாக என்/நம் மனதில் உள்ள விரக்திகளை வெளிக்கொணர முயற்சிக்கிறேன்!

Muthu Comics # 200 - Marma Surangam!Muthu Comics # 200(a) - Gorilla Samrajyam! (Reprint)

கொரில்லா சாம்ராஜ்யம் குறித்து மேல்விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளை பயன்படுத்தவும்!

லயன் காமிக்ஸ்:

லயன் காமிக்ஸ் # 200 – கெளபாய் ஸ்பெஷல்! அட்டைப்படம் உங்கள் பார்வைக்கு! முத்து காமிக்ஸ் 200வது இதழை எந்த அளவுக்கு மொக்கையாக வழங்கியிருப்பாரோ அதற்கு நேர்மாறாக லயன் காமிக்ஸ் # 200 – கெளபாய் ஸ்பெஷல்!ஐ அசத்தியிருப்பார் ஆசிரியர்!

Lion Comics # 200 - Cowboy Special - Front CoverLion Comics # 200 - Cowboy Special - Back Cover

இந்த இதழ் குறித்த மேல்விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

ராணி காமிக்ஸ்:

ராணி காமிக்ஸ் # 200 – விசித்திர குள்ளர்கள்! என்னிடம் இல்லையென்பதால் அதன் அட்டைப்படத்தை வெளியிட முடியவில்லை! ராணி ரசிகர்கள் மன்னிக்கவும்!

இந்திரஜால் காமிக்ஸ்:

தமிழில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ் # 200 என்னிடம் இல்லையென்பதால் அதன் அட்டைப்படத்தை வெளியிட முடியவில்லை! இந்திரஜால் ரசிகர்கள் மன்னிக்கவும்! ஆங்கில இந்திரஜால் காமிக்ஸ் # 200 அட்டைப்படம் உங்கள் பார்வைக்கு!

Indrajal Comics # 200 - Ratmen of Rodencia

இந்த இதழை தரவிறக்கம் செய்து படித்து மகிழ கீழ்காணும் சுட்டியை பயன்படுத்தவும்!

பி.கு.:

இப்பதிவுக்கு உந்துதலாக விளங்கியோர் மூவர்! அவர்களுக்கு எனது நன்றிகள்!

தொடர்புடைய இடுகைகள்:

பிற சிறப்பிதழ்கள்:

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!