Saturday, January 2, 2010

புத்தாண்டு சிறப்புப் பதிவு!

“லெஸ் டென்சன் மோர் வர்க்! மோர் வர்க் லெஸ் டென்சன்!”
-செந்தில் (படம்: ஜெண்டில்மேன்)
வணக்கம்,

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த புது வருடம் உங்களுக்கும் உங்கள் உற்றார் உறவினர் அனைவருக்கும் இனியதாக அமைய இறைவனை  பிரார்த்திக்கிறேன்! இந்தப் புத்தாண்டில் மேற்குறிப்பிட்டுள்ள வாசகத்தை அனைவரும் தாரக மந்திரமாக ஏற்று வாழ்வில் சிறப்புருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்!

பதிவுக்கு செல்லும் முன் ஒரு முக்கிய தகவல்!

நெடுநாட்களாகக் காணாமல் போயிருந்த இரு காமிக்ஸ் வலைஞர்கள் இன்று அதிரடியாகப் பதிவுலகுக்குத் திரும்பப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! அவர்கள் வேறு யாருமல்ல!

சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி மதிப்பிற்குரிய திரு.அய்யம்பாளையத்தார் அவர்களும், தமிழ் காமிக்ஸ் வலையுலகின் ‘முடி’சூடிய மன்னராகியவரும், எனக்கு மிகவும் வேண்டப்பட்ட விரோதியுமாகிய கிங் விஸ்வா-வுமே ஆவர்!

கீழ்காணும் சுட்டிகளின் மூலம் இவர்களை மீண்டும் சந்திக்கலாம்!

ஒகே! மொக்கை போட்டது போதும்! இனி பதிவுக்குப் போவோம்!

புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் எவ்வாறு நமது அபிமான காமிக்ஸ்கள் நம்மை குதூகலப் படுத்தின என்பதை ஒவ்வொரு வருடமாகக் காண்போம்!

1976:

முத்து காமிக்ஸ் # 046 – வைரஸ்-X பின்னட்டையில் 1976-ம் வருட காலண்டர் பிரசுரிக்கப் பட்டது! கடந்த 1975 ஆண்டு அக்டோபர் மாதத்தில் கர்ம வீரர் காமராஜர் மறைந்து விட்டபடியால் அவரது படமும் பிரசுரிக்கப்பட்டது!

Muthu Comics # 046 - Virus - XMuthu Comics # 046 - Virus - X - Calendar

வைரஸ்-X குறித்து முத்து விசிறி-யின் முத்தான பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

வைரஸ்-X ஆங்கில காமிக்ஸ் (AFI) டவுன்லோடு செய்ய கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

1977:

1977-ல் முத்து காமிக்ஸ்-ல் முதன்முறையாகப் புத்தாண்டு மலர் வெளியிடப்பட்டது! முத்து காமிக்ஸ் # 058 – முகமூடி வேதாளன் அட்டகாசமான சைஸில் இரு வண்ணங்களில் வெளிவந்தது ஜனவரி 1977-ல் வெளிவந்தது! வேதாளர் முத்து காமிக்ஸ்-ல் அறிமுகமானதும் இந்தக் கதை மூலம்தான்!

முத்து காமிக்ஸ்-ல் வெளிவந்த வேதாளர் கதைகள் குறித்து மிக நீண்ட ஆரய்ச்சிப் பதிவொன்றை அ.கொ.தீ.க.வில் விரைவில் எதிர்பாருங்கள்!

Muthu Comics # 057 - Kadalil Thoongiya Bootham - Mugamoodi Vedhalan - AdMuthu Comics # 058 - Mugamoodi Vedhalan

இவ்விதழுடன் புத்தாண்டு பரிசு வழங்கப் பட்டுள்ளது! அது என்ன்வென்று எனக்குத் தெரியவில்லை! தெரிந்தால், யாரிடமேனும் அது இன்னமும் பத்திரமாக இருந்தால் தெரியப் படுத்துங்களேன்!

இக்கதையை ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

உபயம்: http://bookscomics.blogspot.com/

1978:

ஜனவரி 1978-ல் வெளிவந்த முத்து காமிக்ஸ் # 069 – பழி வாங்கும் பாவை பின்னட்டையில் 1978-ம் வருட காலண்டர் பிரசுரிக்கப் பட்டது!

Muthu Comics # 069 - Pazhi Vaangum PaavaiMuthu Comics # 069 - Pazhi Vaangum Paavai - Calendar

1979:

1979-ம் வருடம் ஜனவரி மாதம்  மீண்டும் ஒரு முறை புத்தாண்டு சிறப்பிதழ் ஆக வேதாளர்-ன் அதியற்புத சாகசமான முத்து காமிக்ஸ் # 086 - சூனியக்காரியின் சாம்ராஜ்யம் வெளிவந்தது! இக்கதை குறித்தும் பின்வரும் பதிவுகளில் காண்போம்!

இந்த சமயத்தில் முத்து காமிக்ஸ் மாதம் இருமுறை வெளிவந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது!

இக்கதையோ அல்லது இதன் இரண்டாம் பாகமோ இந்திரஜால் காமிக்ஸ்-ல் கூலா-கு கொடுசூலி என்று வந்ததாக ஞாபகம்! தோழர் புலா சுலாகி மனம் வைத்தால் நாம் அனைவரும் படித்து மகிழலாம்!

Muthu Comics # 085 - Mugamoodi Kollaikaari - Sooniyakkaariyin Saamraajyam - AdMuthu Comics # 086 - Sooniyakkaariyin Saamraajyam

இக்கதையை ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

உபயம்: http://bookscomics.blogspot.com/

1982:

ஜனவரி 1982-ல் பொங்கல் மலர் ஆக இரும்புக்கை மாயாவி சாகஸமான முத்து காமிக்ஸ் # 132 - தவளை மனிதர்கள் வெளிவந்தது! இதன் பின்னட்டையில் 1982-ம் வருட காலண்டர் பிரசுரிக்கப்பட்டது!

Muthu Comics # 132 - Thavalai ManidhargalMuthu Comics # 132 - Thavalai Manidhargal - Calendar

இக்கதை குறித்த மேல் விவரங்களைத் தனியொரு பதிவில் விரைவில் காண்போம்! அதுவரை காத்திருக்கவும்!

1986:

ஜனவரி 15-31, 1986 தேதியிட்ட ராணி காமிக்ஸ் # 086 – புத்தாண்டு விருந்து! பொங்கல் மலர்-ஆக வெளிவந்தது! ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்களின் வழக்கப்படி பொங்கல் மலர்-ல் வழக்கம் போல இந்திய நாயகரான இன்ஸ்பெக்டர் கருடா கதை பிரசுரிக்கப்பட்டது! முழுக்கதையும் உங்கள் பார்வைக்கு! படித்து மகிழவும்!

Rani Comics # 086 - Puththaandu VirundhuRani Comics # 086 - Puththaandu Virundhu - Page 03Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 04Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 05Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 06Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 07Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 08Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 09Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 10Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 11Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 12Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 13Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 14Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 15Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 16

இன்ஸ்பெக்டர் கருடா குறித்த முழு நீளப் பதிவு அ.கொ.தீ.க.வில் விரைவில் வெளிவரும்!

1988:

1988-ல் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் தனது சக்திகளின் உச்சத்தில் இருந்த சமயத்தில் லயன், மினி லயன், திகில் மற்றும் முத்து என சராமரியாக மாதாமாதம் காமிக்ஸ்களை வெளியிட்டுக் கொண்டிருந்த நேரம்! அப்போது லயன், திகில், மினி லயன் ஆகிய மூன்று இதழகளுக்கும் சந்தா கட்டுவோருக்கு இலவச காலண்டர் வழங்கினார்! இதே போல் பின்வரும் வருடங்களின் டீ-ஷர்ட், கீ-செயின் என்று பல ஊக்கப் பரிசுகள் வழங்கினார்!

Mini Lion Comics # 11 - Visithira JodiMini Lion Comics # 11 - Visithira Jodi - Calendar

அந்த காலண்டர், டீ-ஷர்ட் மற்றும் கீ-செயின்  யாரிடமேனும் இன்னமும் பத்திரமாக இருந்தால் தெரியப் படுத்துங்களேன்!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்! அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

11 comments:

  1. தலைவரே,

    சிறப்பான ஸ்கேன்கள் கொண்ட பதிவு. குறிப்பாக முகமூடி வேதாளன் மற்றும் பழிவாங்கும் பாவை. அவற்றின் கவர்ச்சி இன்னமும் விலகவில்லை.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. புத்தாண்டு விருந்து அமர்க்களம் தலைவரே.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  3. //இக்கதையோ அல்லது இதன் இரண்டாம் பாகமோ இந்திரஜால் காமிக்ஸ்-ல் கூலா-கு கொடுசூலி என்று வந்ததாக ஞாபகம்! தோழர் புலா சுலாகிமனம் வைத்தால் நாம் அனைவரும் படித்து மகிழலாம்//

    என்ன கொடுமை சார் இது? உண்மையில் இரண்டாம் பாகம்தான் இந்திரஜாலில் நீங்கள் சொன்ன அந்த பேரில் வந்தது. அந்த கதையை மூன்று பாகமாக பிரித்து போட்டு மொக்கை செய்வார்கள். என்னிடம் மூன்று பாகமும் உள்ளது.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  4. //வைரஸ்-X ஆங்கில காமிக்ஸ் (AFI) டவுன்லோடு செய்ய கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!//

    தலைவரே,

    அந்த ஆங்கில வடிவத்தில் இருக்கும் கதையை நம்முடைய முத்து காமிக்ஸ் கதையை படித்த யாரையும் படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள்.

    அவை சிவியராக எடிட் செய்யப்பட்டவை. குறிப்பாக கதையின் முடிவு கூட இருக்காது. அதனால் அந்த கதையை படித்து விட்டு நண்பர்கள் யாரும் இந்த கதையையா ஆசிரியர் தன்னுடைய டாப் டென்னில் செலக்ட் செய்தார் என்று நினைப்பார்கள்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  5. பிரபல பதிவர் டாக்டர் செவனே,

    வணக்கம். அட்டைப் படங்களை போட்டே அசத்துகிறீர்கள். தொடருங்கள்.

    எனக்கு தெரிந்த வரையில் மூன்று மணி நேரத்தில் பிரபலம் ஆனா ஒரே காமிக்ஸ் பதிவு இதுவாகத் தான் இருக்கும். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. படிக்கும் வாசகர்களுக்கு, சில பல விளக்கங்கள்:

    1 சூனியக்காரியின் சாம்ராஜ்ஜியம் கதை இந்திரஜால் காமிக்ஸில் தமிழில் இரண்டாம் பாகமாகவே வந்தது. அதன் பெயர் தான் கூலாகூ கொடுசூலி. இந்த புத்தகம் என்னுடைய பாதுகாப்பிலும் உள்ளது. அந்த காலங்களில் வேதாளனின் கதையை தவிர வேறு எந்த இரண்டாம் நிலை ஹீரோக்களின் கதையும் கொண்ட புத்தகங்கள் சரியாக விற்பனை ஆகாததால் இந்த பதிப்பகத்தினர் ஒரு வேதாளனின் கதையை இரண்டு / மூன்று பாகமாக பிரித்து போட்டு அதில் இரண்டாவது கதையாக புஸ் சாயர் கதையையோ அல்லது ரிப் கிர்பி கதையையோ பதிப்பித்தனர்.

    2 . முத்து காமிக்ஸில் வந்த வைரஸ் எக்ஸ் கதையை தான் ஆசிரியர் தன்னுடைய டாப் டென் கதையாக தேர்ந்து எடுத்து இருப்பார். இந்த வைரஸ் எக்ஸ் மாலைமதி AFI காமிக்ஸில் வந்தது. அதனால் தமிழாக்கத்தையோ அல்லது கதையோட்டதையோ இந்த ஆங்கில மூலத்தை கொண்டு நிர்ணயிக்க வேண்டாம். முடிந்தால் முத்து காமிக்ஸில் வந்த கதையை தேடிபிடித்து படித்து ரசியுங்கள்.

    3 . //அந்த காலண்டர், டீ-ஷர்ட் மற்றும் கீ-செயின் யாரிடமேனும் இன்னமும் பத்திரமாக இருந்தால் தெரியப் படுத்துங்களேன்! // மேதகு அய்யம்பாளயத்தாரை தொடர்பு கொள்ளுங்கள்.

    ReplyDelete
  7. வாவ், அந்த கால முத்து காமிக்ஸின் அட்டைபடங்கள் தான் எவ்வளவு அழகு...அதிலும் பழிவாங்கும் பாவை தரமான அட்டைபடங்களின் உச்சம். காண்பதற்கு வாய்ப்பளித்த டாக்டர் அவர்களுக்கு நன்றிகள்

    ReplyDelete
  8. Hi Doc,

    Great post. Thanks for the links.
    Wish you happy new year!

    With warm regards,
    Mahesh

    ReplyDelete
  9. டாக்டர் ஐயா!

    காலம் அறிந்து பதிவிடுவதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள். தவளை மனிதர்கள் அட்டைபடம் அருமை. வெளிச்சத்தை அட்டகாசமாக கையாண்டுள்ளனர். தற்போதை நமது இதழ்களின் அட்டைபடங்கள் பள்ளியில் படிக்கும் வாய்பாட்டு புத்தகத்தை நினைவூட்டுகின்றன. அட்டைப்பட சித்திரங்களும் சரி, தலைப்பிடுதலும் சரி அக்கால ஓவியர்களே சிறந்தவர்கள். தற்கால அட்டைகளை வடிவமைக்கும் DTP OPERATORகளின் படைப்புகள் பாராட்டும்படியாக இல்லை.

    ReplyDelete
  10. அருமையான படங்களை மறுபடியும் பார்க்க வைத்தமைக்கு நன்றிகள் பல கோடி.

    காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசிப் பொங்கல், வீட்டுப் பொங்கல், ஹோட்டல் பொங்கல்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!