Saturday, December 26, 2009

வாத்தியார்!

வணக்கம்,

சரியாக 22 ஆண்டுகள் முன்பு (26-12-1987) அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் மண்ணை விட்டு மறைந்தார்! அவரது மறைவையொட்டி அச்சமயத்தில் தமிழக முதல்வராகப் பதவி வகித்த அவருக்கு மரியாதை செய்யும் விதமாக நமது ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் மினி லயன் # 11 – விசித்திர ஜோடி இதழில் அஞ்சலி செலுத்தினார்!

ரசிகர்களால் செல்லமாக வாத்தியார் என்றழைக்கப் பட்ட காரணத்தால், அவரது நினைவாக நாமெல்லாம் வாத்தியார் என்று அறிந்த ஒரு காமிக்ஸ் கதாநாயகன் குறித்த ஒரு சிறு பதிவு!

ராணி காமிக்ஸ் மூலம் நமக்கெல்லாம் வாத்தியார் தில்லான், தீரர் தில்லான், மார்ஷல் தில்லான் என்றெல்லாம் பரிச்சயமான கதாபாத்திரம் பற்றியதே இந்தப் பதிவு! இதன் மூலத்தை முதலில் காண்போம்!

GUNSMOKE:

GUNSMOKE அமெரிக்காவில் புகழ்பெற்றதொரு வானொலி மற்றும் தொலைக்காட்சித் தொடராகும்! நமக்கெல்லாம் மிகவும் பிடித்த கெளபாய்க்களின் உலகை முதன்முதலாக அவர்களின் வாழ்வை ஒட்டிய உண்மைகளைக் கூறும் விதமாக அமைந்தது வானொலித் தொடர்! பின்னர் தொலைக்காட்சித் தொடரும் வெளிவந்து வெற்றி பெற்றது!

இத்தொடரில் ஜான் வெய்ன்-ஐ நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுத் தோல்வி அடைந்தன! ஹாலிவுட்டில் மார்க்கெட் இல்லாதவர்கள்தான் தொலைக்காட்சியில் நடிக்க முன்வருவார்கள் என்ற கருத்து அப்போதே நிலவி வந்திருக்கிறது! இத்தொடர் குறித்து மேலும் அறிந்து கொள்ள கீழ்கானூம் சுட்டியைப் பயன்படுத்தவும்!

காமிக்ஸ்:

தொலைக்காட்சித் தொடரின் வெற்றியை ஒட்டி அது காமிக்ஸ் வடிவிலும் வெளிவந்தது! DELL மற்றும் GOLD KEY நிறுவனத்தினரால் இக்கதைகள் பிரசுரிக்கப்பட்டன! அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு! இந்த கதைகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

செய்திதாள் சித்திரத்தொடர்:

GUNSMOKE தொடர் அமெரிக்காவில் மட்டும் பிரபலமல்ல! பிரிட்டனிலும் GUN LAW என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஒலி/ஒளிபரப்பப்பட்டது! அதன் வெற்றியைத் தொடர்ந்து செய்தித்தாள் சித்திரத் தொடர் வடிவில் வெளிவந்தது!

ஹாரி பிஷப் எனும் ஓவியரின் அற்புதமான சித்திரங்களுடன் இத்தொடர் வெளிவந்தது! சாம்பிள் கீழே (நன்றி ஸ்டீவ் ஹாலண்ட்)!

GunLaw

இந்த செய்தித்தாள் சித்திரத் தொடரில் வந்த கதைகள் தான் நமக்குத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளிவந்தன! இத்தொடர் குறித்து பிரிட்டிஷ் காமிக்ஸ் ஆராய்ச்சிப் பேரறிஞர் ஸ்டீவ் ஹாலண்ட் இட்டுள்ள பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

Rani Comics # 100 - Vettai Naai - Introராணி காமிக்ஸ்:

Rani Comics # 097 - Thudikkum Thuppakki - 1st Panelதமிழில் இத்தொடரை நமக்கு ராணி காமிக்ஸ் நிறுவனத்தினர் அறிமுகம் செய்துவைத்தனர்! இத்தொடர் ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்கள் ராணி காமிக்ஸ்-லிருந்து வெளியேறிய பின்னரே வந்திருந்தாலும் இத்தொடரை நமக்கு அறிமுகம் செய்ததில் அவரது பங்கு நிச்சயம் இருக்கும் என்பது எனது எண்ணம்!

MARSHALL MATT DILLON என்ற கதாபாத்திரத்தை நமது மண்ணியம் கருதி வாத்தியார் தில்லான் என்று பெயர் சூட்டினார்! அதே போல் பிற கதாபாத்திரங்களுக்கும் இந்தியத் தன்மையுடன் பெயர்களைச் சூட்டினார்! இது நிச்சயம் ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்களின் EDITOR’S TOUCH!

ஆரம்பத்தில் 5 கதைகள் மட்டுமே வந்து பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பின் கதைகள் வந்ததற்குக் காரணம், ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்கள் சில கதைகளை ஏற்கெனவே மொழிபெயர்த்து வைத்து விட்டு பின்னர் வெளியேறியிருக்க வேண்டும் என்பதாகக் கூட இருக்கலாம்!

இவரது பெயர்க் காரணம் குறித்து நான் சிறு வயதில் சிலபல கருத்துக்கள் கொண்டிருந்தேன்! எத்தனை எதிரிகள் வந்தாலும் அஞ்சாமல் எம்.ஜி.ஆர். போல் தில்லாக எதிர்த்து நின்று போராட்டி வெற்றி பெறுவார் என்பதால் இவருக்கு வாத்தியார் ‘தில்’லான் என்ற பெயரோ என்றெல்லாம் எண்ணியிருந்தேன் (இப்போதும் கூட)!

Rani Comics # 097 - Thudikkum ThuppakkiRani Comics # 100 - Vettai NaaiRani Comics # 112 - Iratha BaliRani Comics # 130 - KuzhandhaikkaagaRani Comics # 136 - Marma Kollaikkaaran

ஆனால் பிற்காலங்களில் தீரர் தில்லான், மார்ஷல் தில்லான் என்றெல்லாம் இவரைக் குறிப்பிட ஆரம்பித்தனர்! ஆனால் ஏனோ வாத்தியார் என்றழைப்பதில் ஏற்படும் நெருக்கம் இவற்றில் இல்லை!

Rani Comics # 353 - Nadigaiyai ThediRani Comics # 359 - Pudhai KuzhiRani Comics # 363 - Kolaikara KaidhiRani Comics # 378 - IrattaiyargalRani Comics # 389 - Killadikku KilladiRani Comics # 418 - Maya KudhiraiRani Comics # 430 - Thuppakki Gumbal

இப்போதைக்கு கைவசம் வேறு விவரங்கள் ஏதுமில்லாததால் ராணி காமிக்ஸ்-ல் வந்த தில்லான்-ன் கதைகளின் அட்டைப்படங்கள் மட்டுமே உங்கள் பார்வைக்கு!

Muthu Comics # 267 - Thurathum Thottaமுத்து காமிக்ஸ்:

முத்து காமிக்ஸ்-லும் கூட தில்லான் கதைகளை வெளியிட்டுள்ளார் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள்! ஆனால் அவற்றை வெஸ் ஸ்லேட் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்! ஏனென யூகிக்க மட்டுமே முடியும்!

ஹாரி பிஷப்-பின் ஓவியங்களுக்கு நமது ஆசிரியர் நிச்சயம் ரசிகராகத்தான் இருக்க வேண்டும்! ராணி காமிக்ஸ்-ல் ஏற்கெனவே வெளிவந்த பிரபலமான ஹீரோ என்பதாலும் புதிதாக இன்னொரு ஹீரோவை அறிமுகப் படுத்த வேண்டிய கட்டாயம் இருந்ததாலும், ஏற்கெனவே நமக்கு அறிமுகமான வெஸ் ஸ்லேட் என்ற கதாபாத்திரத்தின் மூலம் இக்கதைகளை அவர் வெளியிட்டிருக்கூடும்!  இது வெறும் யூகம் மட்டுமே!

தில்லான் மற்றும் வெஸ் ஸ்லேட் குறித்த தீவிர ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன! விரைவில் முழு விவரங்கள் கூடிய பதிவுடன் உங்களைச் சந்திக்கிறேன்! அதுவரை காத்திருக்கவும்!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:

சென்ற பதிவான கிறிஸ்துமஸ் சிறப்புப் பதிவு!-ல் சில விஷயங்களைக் கூற மறந்து விட்டேன்! மன்னிக்கவும்!

 • முந்தைய பதிவான மேரா நாம் ஜோக்கர்-ல் கேட்கப்பட்ட வெகுமதி! கேள்விக்கு சரியான விடையளித்த நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவர் கனவுகளின் காதலர்-க்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தாமதமாகத் தெரிவிப்பதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்!
  கேள்வி : மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் வரும் ஜீனா யஹான்! மர்னா யஹான்! பாடலின் மெட்டைத் தழுவிய (காப்பியடித்த) தமிழ் பாடலைக் கூறுக!
  பதில் : காதோடுதான் நான் பாடுவேன்! (படம்: வெள்ளி விழா)

தொடர்புடைய இடுகைகள்:

எனது முந்தைய எம்.ஜி.ஆர். பதிவு:

3 comments:

 1. //http://rapidshare.com/files/139680027/gunsmoke.rar | 81337 KB

  This file can only be downloaded by becoming a Premium member
  //


  ம்..,...ம்...,ம்....,

  அழுகை அழுகையா வருது...,

  ReplyDelete
 2. உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதில்
  enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

  உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
  ஓட்டளிப்புப் பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

  ReplyDelete
 3. //SUREஷ் (பழனியிலிருந்து) said...

  //http://rapidshare.com/files/139680027/gunsmoke.rar | 81337 KB

  This file can only be downloaded by becoming a Premium member
  //

  ம்..,...ம்...,ம்....,

  அழுகை அழுகையா வருது...,//

  தேவையில்லை! ஒரு நிமிடம் காத்திருந்தால் போதும்! இலவசமாகவே டவுன்லோடு செய்யலாம்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!