Friday, December 11, 2009

மன்னர் பீமா!

Indrajal Comics # 267 - Bahadur - The Red Bricks Houseவணக்கம்,

சமீபத்தில் சிலபல இந்தி(ய) காமிக்ஸ் வலைத்தளங்களில் கண்ட ஒரு துக்ககரமான செய்தியே இப்பதிவை நான் இட காரணம்! கடந்த 09-12-2009 அன்று பிரபல இந்திய காமிக்ஸ் ஓவியர் திரு.கோவிந்த் பிரம்மாணியா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்!

இவர் பிரபல இந்திரஜால் காமிக்ஸ் கதாநாயகனான பஹதூர் கதைகளின் ஓவியர் ஆவார்! பஹதூர் கதைகளை நாமெல்லாம் ரசித்திருந்தாலும் கூட நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான இன்னொரு காமிக்ஸ் கதாபாத்திரத்தின் ஓவியராகவும் இவர் திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

அவர் வேறு யாரும் அல்ல நமக்கெல்லாம் ராணி காமிக்ஸ் மூலம் அறிமுகமான மன்னர் பீமா தான் அவர்!

அண்ணாரது நினைவாக இத்தருணத்தில் மன்னர் பீமா குறித்த சில தகவல்களை உங்களுடன் பரிமாறிக் கொள்கிறேன்!

மன்னர் பீமா:

அபித் சுர்த்தி, கோவிந்த் பிரம்மாணியா என பஹதூர்-ஐ உருவாக்கிய அதே வெற்றிக் கூட்டணிதான் மன்னர் பீமாவையும் உருவாக்கினர்! ஆரம்பத்தில் மன்னர் பீமா கதைகள் செய்தித்தாள்களில் சித்திரக்கதைத் தொடராக வெளிவந்தன! பின்னர் காமிக்ஸ் வடிவில் வெளிவந்தன!

மன்னர் பீமா கதைகளை ஆங்கிலத்தில் SPACE AGE COMICS வெளியிட்டுள்ளனர்! ஹிந்தியில் மதுமுஸ்கான் காமிக்ஸ் வெளியிட்டுள்ளனர்! தமிழில் முத்து காமிக்ஸ் வார மலர்-லும், ராணி காமிக்ஸ்-லும் வந்தது!

முதல் கதை:

இதுதான் மன்னர் பீமா கதை வரிசையில் முதல் கதையாகும்!  இக்கதை முத்து காமிக்ஸ் வார மலர்-ல் வனராஜா யார்? என்ற பெயரில வெளிவந்தது! இதில் அவரது வீர பராக்கிரமங்கள் நமக்கு அறிமுகப் படுத்தப்படுகின்றன! கிட்டத்தட்ட வேதாளர்-ஐ நினைவு படுத்தினாலும் கூட கதையில் காணப்படும் மண்ணின் மணம் நம்மை கவரவே செய்கிறது!

Space Age Comics # 3 - Shuja - CoverSpace Age Comics # 3 - Shuja - Innercoverscan0001

ஹிந்தியில் வெளிவந்த மன்னர் பீமா காமிக்ஸ் தரவிறக்கம் செய்ய கீழ்காணும் சுட்டியை பயன்படுத்தவும்! அகர் ஆப்கோ ஹிந்தி மாலூம் ஹை தோ கஹானி பட்கர் மஜா உட்டாயியே!

முத்து காமிக்ஸ் வார மலர்:

மன்னர் பீமா தமிழில் முதன்முதலாக முத்து காமிக்ஸ் வார மலர்-ல் தான் அறிமுகமானார்! முல்லை தங்கராசன்-ன் மேற்பார்வையில் வெளிவந்த முத்து காமிக்ஸ் வார மலர்-ன் முதல் இதழில் (14-11-1982) மன்னர் பீமாவும் இடம்பெற்றிருந்தார்!

கதை செய்தித்தாள்களில் வெளிவந்த அதே SUNDAY STRIP வடிவில் வெளிவந்திருப்பது சிறப்பு! வண்ண அச்சு மேலும் மெருகூட்டுகிறது! மொத்தம் 17 இதழ்களுக்கு கதை தொடர்ந்தது!

MCV#1-VanaRaja

இரண்டாவது கதை 18வது இதழ் (17,24-04-1983) முதல் தொடங்கியது! 5 இதழ்களுக்கு மட்டுமே கதை வெளிவந்தது! கருப்பு வெள்ளை மட்டுமே! முத்து காமிக்ஸ் வார மலர் 22 இதழ்களோடு (19-02-1984) நின்று விட்டதால் இக்கதை பாதியிலேயே நின்று விட்டது!

MCV#18-VanaRaja

முத்து காமிக்ஸ் வார மலர் பற்றி மேலும் அறிந்து கொள்ள முத்து விசிறியின் முத்தான பதிவைப் படிக்கவும்!

ராணி காமிக்ஸ்:

ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்கள் அறிமுகப்படுத்திய அற்புத கதாநாயகர்களின் இந்திய வரிசையில் மன்னர் பீமாவும் அடங்குவார்! மொத்தம் நான்கு கதைகள் வெளிவந்தன! அவற்றில் 3 ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்களின் மேற்பார்வையில் வெளிவந்தன!

# கதை தேதி குறிப்பு
033 நரபலி! 01-11-1985  
038 ஏழாவது குகை! 15-01-1986 பொங்கல் மலர்
கொள்ளைக் கூட்டம்!
இரண்டாவது கதை
079 பறக்கும் மனிதன்! 01-10-1987 தொடரும் அபாயம்!
இரண்டாவது கதை
114 மண்டை ஓட்டு மர்மம்! 16-03-1989  

தமிழ் கலாச்சாரத்தைத் தழுவும் வகையில் கதையின் சூழலை ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்கள் எவ்வாறு அற்புதமாக மாற்றியமைத்துள்ளார் என்று கூர்ந்து கவனி்த்தால் அவரது மேதைமை நமக்கு விளங்கும்!

Rani Comics Issue No 33 Dated 1-11-1985 King Bheema Narabali CoverRani Comics Issue No 33 Dated 1-11-1985 King Bheema Narabali 1st PageRani Comics Issue No 38 Dated 15-01-1986 Kollai Koottam Inspector Azaad CoverRani Comics Issue No 38 Dated 15-01-1986 King Bheema Ezhavadhu Kugai 1st Page

Rani Comics Issue No 79 Johnny Hazard Thodarum AbayamRani Comics Issue No 79 Dated 1-10-1987 King Bheema Parakkum Manidhan 1st PageRani Comics Issue No 114 Dated 16-03-1989 King Bheema Mandai Ottu Marmam CoverRani Comics Issue No 114 Dated 16-03-1989 King Bheema Mandai Ottu Marmam 1st Page

இவற்றில் கடைசி கதையான ராணி காமிக்ஸ் # 114 - மண்டை ஓட்டு மர்மம் வெளிவந்த போது திரு.அ.ம.சாமி அவர்கள் ராணி காமிக்ஸ் ஆசிரியராக பொறுப்பு வகித்தார் என்பதை நான் சொல்லாமலே நீங்களாகவே முதல் கட்டத்தைப் படித்தவுடனேயே புரிந்து கொண்டிருப்பீர்கள்!

கண்ணீர் அஞ்சலி: 

பஹதூர், மன்னர் பீமா என்ற காலத்திலழியா காமிக்ஸ் கதாபாத்திரங்களை நமக்களித்த அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய தமிழ் காமிக்ஸ் உலகின் சார்பாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்!

Govind Brahmania Govind Brahmania (02-03-1938 - 09-12-2009)

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:

அமரர் கோவிந்த் பிரம்மாணியாவுக்கு காமிக்ஸ் வலைஞர்களின் கண்ணீர் அஞ்சலிகள் சில:

முத்து காமிக்ஸ் வாரமலர் குறித்து முத்து விசிறியின் முத்தான பதிவு:

படங்கள் உபயம்:

DISCLAIMER:

பதிவுக்கும் கீழ்காணும் சுட்டியில் உள்ள தமிழ் திரைப்படத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று இங்கு தெரிவித்துக் கொள்ள நான் கடமைப் பட்டிருக்கிறேன்!

40 comments:

  1. ஹைய்யா நான்தான் பர்ஸ்ட்டு .

    ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கேன். அதனால என்ன சொல்றது, எப்படி சொல்றதுன்னே தெரியல. இருந்தாலும் சொல்றேன்.

    அன்னாருக்கு என்னுடைய ஆழ்ந்த அஞ்சலி.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  2. //அகர் ஆப்கோ ஹிந்தி மாலூம் ஹை தோ கஹானி பட்கர் மஜா உட்டாயியே//

    தமிழ் மொழி காவலர்களின் சார்பில் அந்நிய மொழி உபயோகத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நாம் மொழிப் போரில் செய்த தியாகங்களை அதற்குள் மறந்து விட்டீர்களா? நீங்களும் கேப்டனை போல ஒரு தமிழின காப்பாளன் அல்லவா?

    அய்யகோ, என்ன கொடுமை இது?

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  3. நெஞ்சம் நெகிழ வைத்த பதிவு

    இதில் கூட மண்டை ஓட்டு மர்மமாய் ஒரு உள்குத்து..,

    உங்கள் வாதம் உலகின் ஏழாவது பயங்கரம் தான்

    ReplyDelete
  4. பீமா என்றொரு நாயகன் இருப்பதே இப்பொழுது தான் தெரிகிறது. தகவல்க்கு நன்றி. கலரில் பீமா கதை அட்டகாசமாக இருக்கிறது.

    திரு.கோவிந்த் பிரம்மாணியா அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  5. bheema is a wonderful character, i like the way he drawn the females. a very good comic artist.

    my hearty condolences.

    is he the same artist who created the cop charcater (i forgot the name, but a very handsome indian cop from north india)

    ReplyDelete
  6. RK,

    //is he the same artist who created the cop charcater (i forgot the name, but a very handsome indian cop from north india)//

    I think the cop you mention is Inspector Azad!

    Rani comics published a few stories of Inspector Azad too! One of the covers you see in the post Rani Comics # 38 - Kollai Koottam is an Inspector Azad story!

    The artist for Inspector Azad is Pratap Mullick! The writer is Abid Surti once again!

    If you are taliking about Inspector Garuda or Inspector Vikram they were created by Jagjit Uppal (Story) & Pradip Sathe (Art)!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  7. wow!

    Inspector Azad is the one i was talking about, thanks for the clarifications. you are doing a fabulous job...keep up the great work.

    ReplyDelete
  8. எனக்கு ஸ்வைன்புளு வந்து இருப்பதால் நீங்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    மற்றபடி அண்ணாருக்கு என்னுடைய ஆழ்ந்த அஞ்சலிகள் உரித்தாகுக.

    சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் (போட்டு வைத்துக் கொண்டு பொங்கல் சாப்பிடுபவர்)

    ReplyDelete
  9. தம்பி சாந்தகுமாரா,

    நீ உன்னோட வேலையை இழுங்க செய்து இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. நீ வீணாக என்னுடைய பாணியை காப்பி அடிக்க நினைத்ததால் தான் இந்த பிரச்சினை. இனிமேலாவது ஜாக்கிரதையாக இரு.

    ஆதி'ன்னா பொட்டு வச்சுட்டு பொங்கல் சாப்பிடுவான்னு நெனச்சியா? ஆதிடா, காசிமேடு ஆதி.

    ReplyDelete
  10. திரு.கோவிந்த் பிரம்மாணியா அவர்களுக்கு முதற்கண் எனது அஞ்சலிகள்

    நானும் பீமா கதைகளை படித்ததில்லை ஏன் கேள்விப்பட்டது கூட இல்லை.இந்த கதை வெளியான 1982 இல் தான் நான் பிறந்தேன்.அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றி தலைவரே

    அன்புடன்,
    லக்கி லிமட்
    உலவல்்

    ReplyDelete
  11. இந்த பதிவில் என்னுடைய படமும் இடம் பெற்று இருப்பது குறித்து மகிழ்ச்சி.

    திரு கோவிந்த் பிரம்மானியா அவர்களுக்கு என்னுடைய இரங்கல்கள்.

    பல ஹிட் படங்களை கொடுத்த சியான் விக்ரம்.

    ReplyDelete
  12. மதிப்பிற்குரிய காமிக்ஸ் பயங்கரவாதி அவர்களே,

    நானும் இந்த தலைப்பில் ஒரு பதிவிட இருந்தேன். என்னிடம் ராணி காமிக்ஸ் குறித்த விவரங்களும் தமிழில் வந்த இந்திரஜால் காமிக்ஸ் பற்றிய விவரங்களுமே இருந்தன. முத்து காமிக்ஸ் வாரமலரில் இந்த கதை வந்த விவரம் எனக்கு தெரியாது.

    அருமையாக, கோர்வையாக உள்ளது இந்த பதிவு. பாராட்டுக்கள்.

    உண்மையிலேயே இவருடைய ஓவியங்கள் சற்று வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். இவருடைய வண்ணக் கலவை பாணி என்னை மிகவும் கவர்ந்தது.

    கதைகள் சற்று முன்னுக்குப்பின் முரணாக இருக்கும். உதாரணமாக ஏழாவது குகை என்ற கதையின் முடிவு நினைவிருக்கிறதா? இருந்தாலும் சிறப்பான ஓவியங்களுக்காகவும், சிறந்த கதை ஒட்டதிற்க்காகவும் இவை மன்னிக்கப்படலாம்.

    தொடருங்கள் உங்களுடைய பதிவுகளை.

    மறந்தே விட்டேன்: திரு பிரம்மானியா அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அஞ்சலி.

    ReplyDelete
  13. பகதூரை பற்றியும் நீங்கள் சற்று எழுதி இருக்கலாமோ? ஏனென்றால் அந்த பாத்திரம் தான் பிரம்மாணியாவை புகழ் பெற வைத்தது.

    ReplyDelete
  14. friend,i'm sort of new to the blogging world.do read my reviews and let me know of what you think.thank you.and vote it if you think it is any good.

    http://www.tamilish.com/user/view/shaken/login/ramkvp

    http://illuminati8.blogspot.com/2009/12/disclosure.html

    ReplyDelete
  15. Dr 7,

    இன்று என்னுடைய தாத்தாவின் பிறந்த நாள். சிறப்பு பதிவு எங்கே?

    ReplyDelete
  16. ஆமாம்,

    நானும் கூட மறந்து விட்டேன். சிறப்பு பதிவு எங்கே டாக்டர்?

    கரிஷ்மா கபூர் (ராஜ் கபூர் பேத்தி)

    ReplyDelete
  17. பயங்கரவாதியே,

    நீங்கள் சொன்னபடி என் இன்று சிறப்பு பதிவு இடவில்லை?

    ரந்தீர் கபூர் (கரீனா மற்றும் கரிஷ்மா கபூரின் தந்தை)

    ReplyDelete
  18. டாக்டர்,

    என்னுடைய மகனை பற்றிய சிறப்பு பிறந்த நாள் பதிவு எங்கே? ஏன் அந்த பதிவை இன்னும் இடவில்லை?

    பிரித்விராஜ் கபூர் (ராஜ் கபூரின் தந்தை)

    ReplyDelete
  19. மிஸ்டர் பயங்கரவாதி,

    வேர் இஸ் தி சிறப்பு பர்த்டே பதிவு? யு னோ டுடே இஸ் மை பிரதர்ஸ் பர்த் டே?

    ஷம்மி கபூர் (ராஜ் கபூரின் சகோதரன்)

    ReplyDelete
  20. தம்பி மருத்துவர் ஏழு,

    இன்று என்னுடைய சகோதரன் பிறந்த நாள் என்பதால் ஒரு சிறப்பு பதிவை எதிர்பார்த்து வந்தால், இன்னும் அதனை காண வில்லையே?

    என்ன காரணம் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா? சிறப்பு பிறந்த நாள் பதிவு எப்போது வரும்?

    ஷஷி கபூர் (ராஜ் கபூரின் சகோதரன்)

    ReplyDelete
  21. சார், பயங்கரவாதி சார்,
    கொஞ்சம் தயவு செஞ்சு என்னுடைய தாத்தா பற்றிய சிறப்பு பதிவை இட்டு விடுங்கள். இப்போதுதான் ரொம்ப நாள் கழிச்சு என்னுடைய படம் ஒன்னு ஓடிட்டு இருக்கு. அந்த நல்ல மூடை ஸ்பாயில் செய்யாதீங்கோ சார். ஒரு பிறந்த நாள் பதிவை இட்டு விடுங்களேன், பிளீஸ்.

    ரன்பீர் கபூர் (ராஜ் கபூரின் பேரன்)

    ReplyDelete
  22. ஹலோ டாக்டர், ஹவ் ஆர் யு?

    ரொம்ப நாள் முன்னாடி உங்க கிட்ட ரெக்வஸ்ட் பண்ணேன். நீங்களும் பண்றேன் என்று சொன்னதால் மறுபடியும் கேக்குறேன்.

    இந்த ராஜ் கபூர் பிறந்த நாள் பதிவை நீங்கள் உங்கள் பிளாக்கில் இடலாமே?

    அனில் கபூர் (ஸ்ரீ தேவியின் மச்சினன்)

    ReplyDelete
  23. டாக்டர், பிளீஸ்,

    அந்த சிறப்பு பதிவை இட்டு விடுங்கள். நான் வேண்டுமானால் காரிகன் பற்றி பிரபு தேவாவிடம் சொல்லி ஒரு ரீமேக் படம் எடுக்க சொல்றேன்?

    போனி கபூர் (ஸ்ரீ தேவியின் புருஷன்)

    ReplyDelete
  24. ஒக்க மக்கா,

    எலேய், என்னுடைய பெயரும் ராஜ் கபூர் தான். ஆனால் நான் தமிழ் பட இயக்குனர் மற்றும் (சமீபத்தில்) நடிகர். அதனால் ஒரு பதிவிடும்போது டிஸ்க்ளைமர்'ல் என்னை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

    ராஜ் கபூர் (தமிழ் திரைப்பட இயக்குனர் / நடிகர்)

    ReplyDelete
  25. மருத்துவர் ஐயா,

    தயவு செய்து பதிவை சீக்கிரமாக இடுங்கள்.

    ரிஷி கபூர் (ராஜ் கபூரின் மகன்)

    ReplyDelete
  26. நான்தாண்டா ஒரிஜினல் ராஜ் கபூர்.

    ஒரிஜினல் ராஜ் கபூரின் ஆவி

    ReplyDelete
  27. யோவ்,

    சீக்கிரம் அந்த பதிவை போடுய்யா. நான் எல்லாம் வந்து கம்மென்ட் போட வேண்டி இருக்கு.

    சாஹித் கபூர்

    ReplyDelete
  28. என்னதான் நடக்குது இங்கே? வழக்கமாக நம்ம சைட்ல தான் இந்த கும்மி எல்லாம் நடக்கும். இப்போ என்னடான்னா இங்கேயே நடக்குதே?

    என்னுடைய அன்பிற்குரிய எஜன்ட் காத்தவ் எங்கே என்று தெரியுமா? சில பல மாதங்களாக அவரை காணோம். குளிர் வேறு என்னை வாட்டி எடுக்கிறது.

    சரி, சரி, டாக்டர் செவன், அந்த ராஜ் கபூர் பதிவை இன்றைக்கே இட்டு விடுங்கள்.

    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.
    புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்

    ReplyDelete
  29. தம்பி,

    தயவு செய்து அந்த பதிவை போட்டு விடுப்பா.

    சக்தி கபூர் (ஹிந்தி பட காமெடியன்)

    ReplyDelete
  30. ஐயா டாக்டர் செவன்,

    நீங்க எப்ப அந்த சிறப்பு பதிவை போடுவீங்க? கொஞ்சம் சீக்கிரம் போடுங்க ஐயா.

    ஆஷிஷ் கபூர் (முன்னாள் இந்திய சுழல் பந்து வீச்சாளர்)

    ReplyDelete
  31. சார்,

    என்னை எல்லாம் கமெண்ட் போட சொல்றாங்க சார். பிளீஸ், அந்த பதிவை சீக்கிரம் போட்டு விடுங்க சார்.

    அன்னு கபூர் (அந்நியன் - அஜ்னபி டிவி தொடரில் ஜெயிலராக நடித்தவர்)

    ReplyDelete
  32. ஹே டாக்டர் செவன்,

    போன வருஷம் அந்த அம்மு ஹேர் டானிக் நிகழ்ச்சில பாத்தது. சரி சரி, அந்த ராஜ் கபூர் பதிவ போட்டு விடுப்ப. மக்கள் எல்லோரும் எனக்கு Phone போட்டு கமெண்ட் போட சொல்றாங்க.

    பரத் கபூர் (NDTV Gadjet Guru Programme Steve Kapoor தம்பி + நடிகை நமீதாவின் முன்னால் காதலன்)

    ReplyDelete
  33. Hey Dr 7,

    What is this man? when so many of the Big stars are requesting you to make a special post, why are you hesitating? what is the reason for the delay?

    Common man, do not disappoint us. make a special post on the legendary film maker Raj kapoor. today is his birth day.

    ஸ்டீவ் கபூர் (NDTV Gadjet Guru Programme Anchor + நடிகை நமீதாவின் முன்னால் காதலன் பரத் கபூரின் அண்ணன்)

    ReplyDelete
  34. டாக்டர் மாமோய்,

    சீக்கிரம் அந்த பதிவ போடுங்க மாமா. ராஜ் கபூர் பிறந்த நாள் முடிய இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு.

    சோனம் கபூர் (புதிய ஹிந்தி நடிகை - ஸ்ரீ தேவியின் கொழுந்தன் அனில் கபூரின் மகள்)

    ReplyDelete
  35. பயங்கரவாதி மாம்ஸ்,

    என்னை நினைவிருக்கிறதா? நம்ம பிரபு தேவா படத்தில நான் பத்து வருஷத்துக்கு முன்னே நடிச்சேனே? இந்த பிளாக் பசங்க எனக்கு இண்டர்நேஷனல் போன் போட்டு கமெண்ட் போட சொல்றாங்க. அதனால் நானும் ஒரு கமெண்ட் போட்டு விடுறேன். பிளீஸ் அந்த ராஜ் கபூர் பிறந்த நாள் சிறப்பு பதிவை போட்டு விடுப்பா.

    பை தி வே, அண்ணாருக்கு என்னுடைய ஆழ்ந்த அஞ்சலி.

    ஸ்டீவன் கபூர் (அபாச்சே இந்தியன் என்று அழைக்கப்படும் ரேப் RAP பாடகர்)

    ReplyDelete
  36. வணக்கம் பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே,

    என்னை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், ரோஜா படத்தில் நானும் உங்களை போல ஒரு பயங்கரவாதிதான் என்ற முறையில் உங்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன். சக பயங்கரவாதியின் வேண்டுகோளை நீங்கள் செவி சைப்பீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

    நடிகர் ராஜ் கபூரின் பிறந்த நாள் சிறப்பு பதிவை தயவு செய்து வெளியிடுங்கள்.

    பங்கஜ் கபூர் (மணி ரத்தினம் எடுத்த ரோஜா படத்தில் வரும் பாகிஸ்தான் தீவிரவாதி + நடிகர் சாஹித் கபூர் அப்பா)

    ReplyDelete
  37. ஹலோ மிஸ்டர் பயங்கரவாதி,

    ஐ ஹெர்ட் எ லாட் அபௌட் யு. கைண்ட்லி புட் த ஸ்பெஷல் போஸ்ட் ஆன் ராஜ் கபூர்.

    ஏக்தா கபூர் (ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களின் ராணி - வடநாட்டு ராதிகா)

    ReplyDelete
  38. ஹலோ மிஸ்டர் பயங்கரவாதி,

    ஐ ஆல்சோ ஹெர்ட் எ லாட் அபௌட் யு. கைண்ட்லி புட் த ஸ்பெஷல் போஸ்ட் ஆன் ராஜ் கபூர்.

    துஷ்ஷார் கபூர் (ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களின் ராணி - வடநாட்டு ராதிகா ஏக்தா கபூரின் தம்பி )

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!