Friday, November 6, 2009

கொலை செய்ய விரும்பு!

வணக்கம்,

இன்றுதான் சுடச்சுட தபால் மூலம் வந்திறங்கியிருக்கும் லயன் காமிக்ஸ்#207: கொலை செய்ய விரும்பு! காமிக்ஸ் புத்தகத்தின் முதற்பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் இதைப் படிக்கும் உங்களைப் போலவே நானும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்!

பதிவிற்கு செல்லும் முன் சிலபல தகவல்கள்!

  • முத்து விசிறி நீண்ட நாள் கழித்து பதிவிட்டுள்ளார், அதுவும் சுந்தரத் தமிழில்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
  • இந்தப் புத்தகம் உண்மையில் தமிழ் காமிக்ஸ் வலையுலகின் ‘முடி’சூடிய மன்னனும் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட விரோதியுமான  கிங் விஸ்வா-வின் சந்தா பிரதி! புத்தகம் எனக்கு இன்னும் வரவில்லை! எவருக்கும் முன்னர் அவருக்கு புத்தகம் மீண்டும் ஒரு முறை வந்திருப்பதனால் அவருக்கு லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் உள்குத்து இருக்கிறது என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகிறது!
  • அவர் நாட்டில்/வீட்டில் இல்லாத காரணத்தால், புத்தகத்தை அங்கிருந்து நைஸாக லவட்டிக் கொண்டு வந்து ஸ்கேன் செய்து நமக்கெல்லாம் வழங்கிய அய்யம்பாளையத்தார்-க்கு இந்த தருணத்தில் நாமெல்லாம் நன்றி சொல்ல கடன்பட்டிருக்கிறோம்!

மொக்கை போட்டது போதும், இனி பதிவுக்கு வருவோம்!

ஆண்டு மலர்-ஆக வந்திருக்க வேண்டிய இந்த புத்தகம் மிக தாமதமாக தீபாவளி மலர்-ஆக வந்துள்ளது! தீபாவளி மலர் என்றதும் ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம்! ஆனால் பல சரவெடி சமாச்சாரங்கள் புத்தகத்தில் ஒளிந்துள்ளன! அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்!

அட்டைப்படம்:

ஏற்கெனவே நண்பர் ஜாலி ஜம்பர் மூலம் நீங்கள் அனைவரும் இந்த அட்டைப் படத்தை முன்னோட்டம் கண்டிருப்பீர்கள்! ஆகையால் இதில் புதுமை ஒன்றுமில்லை! எனினும் இதோ அட்டைப்படம் மீண்டும் உங்கள் பார்வைக்கு!

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - Cover

ஹாட்லைன்: 

புத்தகத்தைத் திறந்தவுடன் நான் படிக்கும் முதல் விஷயம் இதுதான்! உங்களில் பலரும் இதைத்தன் முதலில் படிக்க விரும்புவீர்கள் என்று தெரியும்! எனவே மேலும் வளவளவென எழுதாமல், ஓவர் டூ மிஸ்டர்.S.விஜயன்!

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - HotLine01Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - HotLine02

பல கருத்துக்களை ஆசிரியர் முன்வைத்திருக்கிறார்! புத்தகத்திலேயே இந்த இரு பக்கங்கள் தான் ஹை-லைட்! படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்களேன்!

விளம்பரங்கள்:

ஹாட்லைனுக்குப் பிறகு என் கண்கள் நாடுவன விளம்பரங்கள்தான்! இதோ அதியற்புத விளம்பரங்களின் அணிவகுப்பு! சிக்பில்லை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - Next IssueLion Comics # 207 - Kolai Seyya Virumbu - Advt01Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - Advt02

இதில் கடைசி விளம்பரம் நம் கவனத்தைக் கவர்கிறது! மீண்டும் ஒரு முறை எனது பரம வைரியுடன் மோதும் நாளை விரைவில் எதிர்பார்க்கிறேன்! டெக்ஸ் வில்லர் கதை ஒரே பாகத்தில் முடிகிறதென்றால் கண்டிப்பாக  கதை மொக்கையாகத்தானிருக்குமென்பது வரலாறு (மரணத்தின் நிறம் பச்சை, பறக்கும் பலூனில் டெக்ஸ்)! பொறுத்திருந்திருந்து பார்ப்போம்!

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - LCS01Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - LCS02

XIII ஸ்பெஷலுக்கு முன்பதிவு செய்திருக்கும் வாசகர்கள் பட்டியல் இதிலும் தொடர்கிறது! நீங்களும் விரைந்து முன்பதிவு செய்து பட்டியலில் உங்கள் பெயரை இடம்பெறச் செய்யுங்களேன்!

சிங்கத்தின் சிறுவயதில்: 

புத்தகத்தில் நான் அடுத்து படிக்கும் பகுதி இதுதான்! ஆசிரியரின் அற்புத நடையில் மீண்டும் ஒரு முறை திளைக்கும் வாய்ப்பு! படித்து மகிழுங்கள்!

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - SSV-01Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - SSV-02Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - SSV-03

சென்ற இதழான லயன் காமிக்ஸ்#206: மாண்டவன் மீண்டான்! இதழில் வெளிவந்த சிங்கத்தின் சிறுவயதில் இதோ!

Lion Comics#206 - SSV 13aLion Comics#206 - SSV 13bLion Comics#206 - SSV 13c

இதற்கு முந்தைய பகுதிகளைப் படிக்க கீழ்கானும் சுட்டியை பயன்படுத்தவும்!

கொலை செய்ய விரும்பு!

கதையைப் படிக்க விரும்பும் பல வாசகர்களின் நலன் கருதி கதையை நான் இங்கு விமர்சிக்கப் போவதில்லை! மாறாக கதை குறித்த விவரங்கள் மற்றும் பயனுள்ள சுட்டிகள் மட்டுமே வழங்கப் போகிறேன்!

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - Page05Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - Page06ModestyBlaise54-01

அச்சுத் தரம்(?!!) குறித்து நான் எதுவுமே கூறத் தேவையில்லை! நீங்க்ளே கண்கூடாகக் காணலாம்! ஹ்ம்ம்ம்! தமிழில் தரமான அச்சில் காமிக்ஸ் படிப்பதென்பது தற்சமயம் நிறைவேறாத கனவாகாவே உள்ளது!

ஒரு கொசுறு தகவல்! கதையில் ஒரு கிரிக்கெட் பந்து முக்கிய பங்கு வகிக்கிறது! நேற்று நமது இந்திய கிரிக்கெட் அணியினர் சொதப்பியதிலிருந்து மீள இந்தப் புத்தகத்தின் வருகை ஓரளவேணும் உதவக்கூடும்!

கதை : SWEET CAROLINE – கொலை செய்ய விரும்பு!
ஆசிரியர் : பீட்டர் ஒ’டான்னல்
ஓவியர் : நெவில் கால்வின் 
தமிழில் : S.விஜயன்
வெளியீட்டு விபரங்கள் : 29-11-1983 – 19-04-1984 (120 Strips)
EVENING STANDARD (5815-5914A)
தமிழில் : லயன் காமிக்ஸ் # 207 – நவம்பர் 06, 2009

துப்பறியும் ஜார்ஜ் நோலன்:

போனஸ் சிறுகதையாக வெளிவந்திருக்கும் துப்பறியும் ஜார்ஜ் நோலன் சிறுகதையின் சாம்பிள் பக்கம் ஒன்று இதோ உங்கள் பார்வைக்கு!

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - Story#2 - George Nolan

தீர்ப்பு:

நெடுநாள் கழித்து வந்திருக்கும் இந்தப் புத்தகம் காமிக்ஸ் ரசிகர்களுக்கு, குறிப்பாக மாடஸ்டி ரசிகர்களுக்கு நிச்சயம் நல்லதொரு விருந்தாக அமையும்! ஹாட்-லைன், சிங்கத்தின் சிறுவயதில், மற்றும் விளம்பரங்கள் கூடுதல் மதிப்பெண்களை அள்ளுகின்றன!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:

லயன் காமிக்ஸ்#207: கொலை செய்ய விரும்பு! முன்னோட்டம்:

சிங்கத்தின் சிறுவயதில்:

மாடஸ்தி:

8 comments:

  1. தலைவரே,

    சுடச்சுட நீங்கள் வழங்கியிருக்கும் இந்தப் பதிவு அட்டகாசம்.

    ஹாட்லைன், சிங்கத்தின் சிறுவயதில், கமிங் சூன், கதைகளின் பக்கங்கள் என்று நல்ல விருந்து.

    ஆசிரியர் கூறியிருக்கும் இரு புதிய தொடர்கள் எதுவாகவிருக்கும் என்று அறிய ஆவலாகவிருக்கிறது.

    சிறப்பான பதிவு.

    ReplyDelete
  2. //பல வாசகர்களின் நலன் கருதி கதையை நான் இங்கு விமர்சிக்கப் போவதில்லை//

    ஏதோ உள்குத்து தென்படுகிறதே..,

    ReplyDelete
  3. இரத்தபடலம் பற்றி ஆசிரியர் நம்பிக்கையாக கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எப்போதெல்லாம் மாடஸ்டி வருகிறாரோ, அப்பொதெல்லாம் அட்டைபடத்தை சற்று சொதப்பிவிடுகிறாகள். சமீபத்தைய அனைத்து மாடஸ்டி அட்டைபடங்களும் சற்று சொதப்பல் தான் என்பது என் கருத்து

    ReplyDelete
  4. Good info. Im running to grab my copy....
    Vibin

    ReplyDelete
  5. Thank you for the news and the scans. I hope Vijayan does not go the way of online scans because I prefer a physical book rather than reading scans.

    I hope he lists subscribers like us in the advance booking list for XIII.

    ReplyDelete
  6. சூடான விமர்சனத்துக்கு நன்றி :-)

    ReplyDelete
  7. super post.

    thanks for the scans.

    read this comics in englsih by downloading it here:http://rapidshare.com/files/200872981/Modesty_Blaise_54_-_Sweet_Caroline.cbz

    ReplyDelete
  8. வணக்கம்.

    சமீப காலங்களில் பணிச்சுமை காரணமாக என்னால் பதிவுகள் இடவோ அல்லது கமெண்டுகள் இடவோ இயலவில்லை. சக காமிக்ஸ் நண்பர்கள் மன்னிக்கவும்.

    நல்ல கருத்துக்களை முன்னிறுத்தி இருக்கிறார் விஜயன். அதனை சார்ந்து ஒரு பதிவிடுங்களேன்?

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!