Tuesday, April 14, 2009

சித்திரைச் சிறப்பிதழ்கள்!

“ஏக் விஸ்வநாதன்!
தோ விஸ்வநாதன்!
ஏக் தோ விஸ்வநாதன்!
தீன் விஸ்வநாதன்!
சார் விஸ்வநாதன்!
ஏக் தோ தீன் சார் விஸ்வநாதன்!

-கவுண்டமணி (படம் : தேடினேன் வந்தது)

வணக்கம்,

தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு அடியேனின் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த நன்னாளில் பிறந்த நாள் காணும் நமது அபிமான தமிழ் காமிக்ஸ் வலையுலகின் ‘முடி’சூடிய மன்னர் நண்பர் கிங் விஸ்வாவிற்கு நம் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்தப் பதிவு அவரின் நீண்ட(நீண்டுவிட்ட) ஆயுளுக்கு சமர்ப்பணம்! மேற்கூறிய கவுண்டரின் ஹிந்திக் கவிதையும் தான்! மார்க்கண்டேயன் போல, பெஞ்சமின் பட்டன் போல, ஷாகித் அஃப்ரிதி போல மேலும் மேலும் அவரது வயது குறைந்து வாலிபம் வளர வாழ்த்துகிறேன்!

சென்ற பதிவான முத்து ஸ்பெஷல்-க்கு நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றிகள்! தொடர்ந்து இது போன்ற சிறப்பான பதிவுகளை வழங்க என்னால் இயன்றவரை முயற்சிக்கிறேன்! உங்கள் கருத்துரைகளிருந்த கேள்விகளுக்கான பதில்களை நானறிந்த வரை வழங்கியுள்ளேன்! பயனிருப்பின் மகிழ்ச்சி!

மொக்கை போட்டது போதும், இனி பதிவுக்கு வருவோம்!

சென்ற வருடம் வரை இந்த சித்திரை நன்னாளில் தமிழ் புத்தாண்டு அரசாங்கத்தினால் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. நம் காமிக்ஸ் உலகம் மட்டும் விதிவிலக்கா என்ன?

முத்துவிலும், ராணியிலும் சிலபல தமிழ் புத்தாண்டு மலர்கள் வெளிவந்துள்ளன! லயனில் இதுவரை வந்ததில்லை, இனிமேலும் வர வாய்ப்புகள் குறைவுதான்! ஏனெனில் ஏப்ரல், மே மாதங்களில் லயனில் சிறப்பான பல கோடை மலர்கள் வந்து அந்த SLOT-ஐ ஆக்ரமித்துக் கொண்டுவிட்டபடியால் சித்திரைச் சிறப்பிதழ்கள் வரும் வாய்ப்புகள் எப்போதும் சொற்பமாகவே இருந்துள்ளன!

இதுவரை வெளிவந்த தமிழ் புத்தாண்டு மலர்கள் இதோ:

ராணி காமிக்ஸ்:-

இவையனைத்தும் ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்கள் பொறுப்பிலிருந்த போது வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது!

  • 1985 – ராணி#020 – ராட்சத பல்லி!
  • 1986 – ராணி#044 – மந்திர மண்டலம்
  • 1987 – ராணி#068 – மர்ம வீரன்!

Rani Comics Issue 20 April 15 1985 Ratchada Balli (Mark & Manning) 1st Tamil New Yr Spl Rani Comics Issue 44 April 15 1986 Mandira Mandalam (Mark & Manning) 2nd Tamil New Yr Spl Rani Comics Issue 68 April 15 1987 Marma Veeran (Lone Ranger) 3rd Tamil New Yr Spl

ஏற்கெனவே இங்கே குறிப்பிட்டுள்ள பல்வேறு காரணங்களுக்காக நான் இவற்றைப் பற்றிப் பெரிதாக நான் எதுவும் சொல்லப் போவதில்லை!

முத்து காமிக்ஸ்:-

சித்திரைத் திருநாளன்று பலப் புத்தகங்கள் முத்து வெளியிட்டிருந்தாலும் எனக்குத் தெரிந்த வரை இரண்டேயிரண்டு முறைதான் தமிழ் புத்தாண்டு மலர்கள் என அறிவிக்கப்பட்டு சிறப்பிதழ்கள் வெளிவந்தன!

  • முத்து#025 – கொரில்லா சாம்ராஜ்யம் (ஏப்ரல் 1974)
  • முத்து#158 – சதிவலையில் மாயாவி + கடத்தல் முதலைகள் - மறுபதிப்பு (ஏப்ரல் 1987)

முத்து#158 – சதிவலையில் மாயாவி + கடத்தல் முதலைகள் (மறுபதிப்பு):-

நான் படித்த முதல் தமிழ் புத்தாண்டு மலர். இதில் இரண்டு கதைகள்! கூடவே கபீஷும், மொட்டைத்தலையன் ஹென்ரியும்.

முத்து#158 - சதி வலையில் மாயாவி   கடத்தல் முதலைகள் (மறுபதிப்பு) - அட்டைப்படம் முத்து#158 - சதி வலையில் மாயாவி + கடத்தல் முதலைகள் (மறுபதிப்பு) - அட்டைப்படம்

முத்து#158 - சதி வலையில் மாயாவி - பக்கம் 131முத்து#158 - சதி வலையில் மாயாவி - பக்கம் 131

இதில் மாயாவியின் சிறுகதை ஒரு சிறந்த மொக்கைக் கதையாகும்! இன்னொரு கதையான கடத்தல் முதலைகள் ஒரு க்ளாஸிக் ஜானி நீரோ கதை. இதை விமர்சனம் செய்ய தனிப்பதிவு ஒன்று வேண்டுமென்பதால் இப்போதைக்கு இந்தப் புத்தகத்தைப் பற்றி நோ விமர்சனம்! அட்டைப்படங்கள் மட்டும்தான்!

முத்து#020 - கடத்தல் முதலைகள் - அட்டைப்படம்முத்து#020 - கடத்தல் முதலைகள் - அட்டைப்படம் காமிக்ஸ் க்ளாசிக்ஸ்#010 - கடத்தல் முதலைகள்! - அட்டைப்படம்காமிக்ஸ் க்ளாசிக்ஸ்#010 - கடத்தல் முதலைகள்! – அட்டைப்படம்

ஜானி நீரோ பற்றி மேலும் விபரங்கள் அறிய கீழேயுள்ள சுட்டிகளைப் பயன்படுத்தி முத்து விசிறியின் அருமையான பதிவுகளை வாசித்து மகிழவும்! போனஸாக நீங்கள் படித்து மகிழ கபீஷும், ஹென்றியும்.

HENRY-1 HENRY-2 கபீஷ்-1 கபீஷ்-2 கபீஷ்-3 கபீஷ்-4 கபீஷ்-5 கபீஷ்-6 கபீஷ்-7 கபீஷ்-8

கூடவே மாயாவிக் கதையின் VALIANT ANNUAL 1969-ல் வெளிவந்த ஆங்கிலப் பதிப்பு! இக்கதை முழுமையாக இனையத்தில் டவுன்லோடு கிடைக்கவில்லை! 2 பக்கம் நடுவில் மிஸ்ஸாகும்! சுமாரான குவாலிட்டி தான்! ஆனால் இது ஜட்டி போடாத சூப்பர் ஹீரோ மாயாவியின் தலைசிறந்த மொக்கைக் கதை என்பதால் பெரிதாக ஒன்றும் குடிமுழுகிப்போய் விடாது!

01 02 03 06 07 08 09 10 

ஓ.கே. இனி பதிவின் முக்கியப் பகுதிக்கு வருவோம்!

முத்து#025 – கொரில்லா சாம்ராஜ்யம்:-

ஏப்ரல் 1974-ல் தமிழ் புத்தாண்டு மலராக வெளிவந்த இவ்விதழ் பல சிறப்பம்சங்கள் பெற்றது!

  • முத்துவின் 25-வது இதழ்!
  • முத்துவின் முதல் முழு வண்ண இதழ்! (மேலும் மூன்று இதழ்கள் வந்தன!)
  • மறைந்த திரு.முல்லை தங்கராசன் முத்துவின் ஆரம்ப காலங்களில் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்த போது அவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த கடைசி முத்து இதழ்! மீண்டும் 1982-84ல் அவர் முத்து வார மலர்-ல் பணிபுரிந்தார்!
  • ஆரம்ப கால முத்துவின் முதல் பாக்கெட் சைஸ் இதழ்! பாக்கெட் சைஸ் என்றால் இப்போது வரும் சைஸ் அல்ல! 11cmX15cm அளவுடன் சற்றே பெரியது!

இப்பேர்ப்பட்ட சிறப்பம்சங்கள் பொருந்திய இதழின் விளம்பரமும், அட்டைப்படமும் இதோ!

முத்து#025 - கொரில்லா சாம்ராஜ்யம் - அட்டைப்படம் முத்து#024 - மலைக்கோட்டை மர்மம் - விளம்பரம்
முத்து#025 - கொரில்லா சாம்ராஜ்யம் - அட்டைப்படம் முத்து#024 - மலைக்கோட்டை மர்மம் - விளம்பரம்

இக்கதை மீண்டும் 1992-ல் மறுபதிப்பு செய்யப்பட்டது! அப்போது வெளிவந்த முத்துவின் 200-வது இதழுடன் இவ்விதழும் கடைகளுக்கு வந்தது! ஆனால் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் முத்துவின் 300-வது இதழில் வெளியிட்டிருந்த பட்டியலில் வெளியீட்டு எண்ணைத் தவறுதலாகக் குறிப்பிட்டிருப்பார்! முத்துவின் 200-வது இதழ் பற்றிப் பேசினாலே எனக்குக் கடுப்பாகிறது! முத்துவின் சரித்திரத்தைப் பற்றிப் பின்னொரு தருணத்தில் பேசும் போது இவ்விரண்டு விஷயங்கள் பற்றித் தவறாதுக் குறிப்பிடுகிறேன்! இப்போதைக்கு வேண்டாம்!

முத்து#200(a) - கொரில்லா சாம்ராஜ்யம்! - அட்டைப்படம் முத்து#200(a) - கொரில்லா சாம்ராஜ்யம்! - அட்டைப்படம்

இன்னும் இக்கதை காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-ல் வரவில்லை. இக்கதை அடுத்த மறுபதிப்புக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்!

கதை:-

பெரிதாக ஒன்றுமில்லை! கிம்பர் என்ற ஒரு கிறுக்கு விஞ்ஞானி! டிரான்ஸ் ஆல்பா எனும் கருவி மூலம் கொரில்லாக்களின் சக்தியை மனிதர்களுக்கு மற்றுவது எப்படி என்று ஆராய்கிறான்! அவனது பலியாடு, சக்கரவர்த்தி எனும் கொரில்லா!

இது போன்ற கதைகளின் இனி என்ன ஆகும்? வழக்கம்போல ஒரு நாள் திடீரென சக்கரவர்த்தி தப்பித்துக் கொள்கிறது. டிரான்ஸ் ஆல்பா மூலம் கிம்பரின் அறிவைப் பெற்றுக்கொள்கிறது! ஒரு கொரில்லாப் படையொன்றையமைத்துக் கொண்டு உலகையேத் தன்வசப்படுத்த முயற்சிக்கிறது!

இறுதியில் மாயாவி எப்படி டிரான்ஸ் ஆல்பாவை அழித்து இவ்வுலகை சக்கரவர்த்தியிடமிருந்து காக்கிறார் என்பதே கதை!

கதையின் மூலம்:-

1963-ல் வெளிவந்த PLANET OF THE APES எனும் நாவல் உலகெங்கிலும் சக்கை போடு போட்டது! பல படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வந்தன! அனைத்தும் பிரம்மாண்ட வெற்றி பெற்றன்!

ஆச்சரியப் படத்தக்க விஷயம் என்னவெனில் இக்கதை ஆங்கிலத்தில் வெளியானது 1967-ல். முதல் PLANET OF THE APES படம் வந்தது 1968-ல். ஒரு வேளை படம் தயாராகிக் கொண்டிருக்கும்போதே அதன் விளம்பரப் பின்னனியில் புத்தகத்தை விற்று விடலாம் என FLEETWAY எண்ணியிருக்கலாம்?!!

PlanetoftheapesPoster B00004W21Q_5438.01.LZZZZZZZ Battle_for_the_planet_of_the_apes Beneath-the-Planet-of-Apes Conquest_of_the_planet_of_the_apes Escape_from_the_planet_of_the_apes Planet_of_the_Apes_(2001)_poster PlanetApesBook

2001-ல் BATMAN (1989) புகழ் டிம் பர்ட்டன் PLANET OF THE APES படத்தை ரீ-மேக் செய்தார். இது ஒரு சிறந்த மொக்கைப் படமாகும்! படம் உலகெங்கும் ஊத்திமூடியதில் வியப்பேதுமில்லை!

முழுநீள வண்ணச் சித்திரக்கதை!:-

இக்கதை முழு வண்ணத்தில் வந்தது, என்றேனல்லவா? இதோ கலருக்கும், கருப்பு வெள்ளைக்குமான வித்தியாசம்! என்னதான் ஃபோட்டோஷாப்பில் ஒப்பேற்றினாலும் கருப்பு வெள்ளையில் மொக்கையாகத்தான் இருக்கிறது, இல்லையா? முழு வண்ணத்தில், தரமான வெள்ளைக் காகித்தில் இவ்விதழை வாசிப்பதே ஒரு சுகானுபவம்! 

முத்து#025 - கொரில்லா சாம்ராஜ்யம் - பக்கம் 3 முத்து#200(a) - கொரில்லா சாம்ராஜ்யம்! - பக்கம் 3
முத்து#025 - கொரில்லா சாம்ராஜ்யம் - பக்கம் 3 முத்து#200(a) - கொரில்லா சாம்ராஜ்யம்! - பக்கம் 3

இதோ நீங்கள் ரசித்து மகிழ இன்னும் சில வண்ணப்படங்கள்! ஈஸ்ட்மென் கலரில் படங்கள் ஜொலிப்பதைக் காணுங்கள்! தமிழில் வெளிவந்த தலைசிறந்த முழு வண்ணக் காமிக்ஸ் இதுதான் என்பதில் சந்தேகமேயில்லை!

01 02 03 04 05 06 07 08

ஆங்கிலப் பதிப்பு:-

இக்கதை ஆங்கிலத்தில் அக்டோபர் 1967-ல் இங்கிலாந்தின் FLEETWAY நிறுவனத்தினர் வெளியிட்ட FLEETWAY SUPER LIBRARY-ன் STUPENDOUS SERIES தொடரின் 19-வது வெளியீட்டில் வெளிவந்தது! ஆங்கிலத்தில் கூட கருப்பு வெள்ளைதான். அனேகமாக இக்கதை உலகிலேயே முதன்முறையாக வண்ணத்தில் வந்தது தமிழில்தான் என்பது என் எண்ணம்!

Fleetway Super Library - Stupendous Series No.19 - March of the Gorillas விச்சு & கிச்சு
FLEETWAY SUPER LIBRARY - STUPENDOUS SERIES No.19 - MARCH OF THE GORILLAS விச்சு & கிச்சு

தவறாகவும் இருக்கலாம்! ஏனெனில் ஐரோப்பாவிலும் மாயாவி மிகப் பிரபலம்! அங்கே வண்ணப் பதிப்பு வந்திருக்கலாம்! அப்படியே வந்திருந்தால் கூட இந்தளவுக்கு சிறப்புடன் வந்திருக்குமா என்பது சந்தேகமே!

போனஸாகப் பின்னட்டையின் உள்பக்கத்தில் வந்த ஒரு விச்சு & கிச்சு கதை! படித்து மகிழுங்கள்! இவ்விதழுடன் பிறந்த நாள் பரிசு! என்ற இலவச இனைப்பு ஒன்று வழங்கப்பட்டது! அது என்னவென்று தெரிந்தால் நெடுநாளைய வாசகர்கள் யாரேனும் கூறுங்களேன்! சத்தியமாக எனக்குத் தெரியாது!

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! ஆங்கில பதிப்புகளின் அத்தனை விபரங்களையும் அளித்த நண்பர் முத்து விசிறிக்கு மனமார்ந்த நன்றிகள்! உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:-

  • நண்பர் கிங் விஸ்வாவின் பிறந்தநாளையொட்டி நான் மேற்குறிப்பிட்ட கவுண்டரின் ஹிந்திக் கவிதை பற்றி ஒரு சிறு குறிப்பு! ஒரிஜினலாக நான் குறிப்பிட்டிருந்த ‘பன்ச்’ வேறு! ஆனால் அது தன் இமேஜை ரொம்ப டேமேஜ் செய்யும் வகையில் இருப்பதாக நண்பர் கிங் விஸ்வா ரொம்ப மன்றாடிக் கேட்டுக் கொண்டதால் அதை வெளியிடவில்லை! தெரிந்து கொள்ள விரும்புவோர் எனக்குப் பெர்சனாலாக இ-மெயில் அனுப்பவும்!

தொடர்புடைய இடுகைகள்:-

ஜானி நீரோ:

கபீஷ்:

முத்துவின் முதல் இதழ் - இரும்புக்கை மாயாவி:

இரும்புக்கை மாயாவி:

காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பற்றிய இடுகைகள்:

பிற சிறப்பிதழ்கள்:

24 comments:

  1. நன்றி தலைவரே.

    தமிழ் காமிக்ஸ் உலகம் உங்களை என்றென்றும் வாழ்த்தும்.

    பதிவில் பிஸியாக இருப்பதால் சிறிது நேரம் (இரண்டு மணி) கழித்து வருகிறேன்.

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  2. காமிக்ஸ் டாக்டருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கொரில்லா சாம்ராஜ்யம் - என்னை கவர்ந்த கதைகளில் ஓன்று. சமீப ஆண்டுகளில் வெளிவந்த 'பிளானெட் ஆப் ஏப்ஸ்' திரைப்படம் கூட ரசிக்கும்படிதானே இருந்தது.

    //சென்ற வருடம் வரை இந்த சித்திரை நன்னாளில் தமிழ் புத்தாண்டு அரசாங்கத்தினால் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. நம் காமிக்ஸ் உலகம் மட்டும் விதிவிலக்கா என்ன?//

    சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறுவது போல கொண்டாட்டம் என்பது நமது கலாச்சாரத்தில் பிரிக்க முடியாத ஓன்று. என்னதான் அரசாங்க கோழி முட்டை அம்மியை உடைக்கும் என்றாலும் எதை எப்போது கொண்டாடுவது என்பதையெல்லாம் அரசு தீர்மானிக்க முடியாது.

    நமது காமிக்ஸ் உலகில் கொண்டாட்டங்கள் குறைந்து வரும் இந்நாளில் கொண்டாடிய நாட்களை நினைவு கூர்ந்த உங்களின் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  3. தமிழ் காமிக்ஸ் வலையுலகிற்கு மீண்டு(ம்)வந்திருக்கும் அய்யம்பாளையத்தாரே,

    வருக! வருக! வந்து வலையுலகை வண்ணமயமாகுக!

    அரசியல் கருத்துக்களையும், பழமொழிகளையும் பார்க்கும் போது நீங்கள் பேக் டு ஃபுல் ஃபார்ம் என்று நன்கு புரிகிறது!

    சிறுவர் இலக்கியமெனும் சிலையை உங்கள் சிந்தனையெனும் உளியால் நீங்கள் விட்டுச் சென்ற ஈடு செய்ய இயலா வெற்றிடத்திலிருந்து தொடர்ந்து செதுக்குவீர்கள் என நம்புகிறேன்!

    இந்தப் புத்தாண்டு உங்களுக்கு எல்லா வளங்களையும், நலங்களையும் அள்ளி வழங்க எல்லாம்வல்ல அந்த இறையை வேண்டுகிறேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  4. அன்புள்ளம் கொண்ட கொடூரமான பயங்கரவாதியே,

    //ஏக் தோ தீன் சார் விஸ்வநாதன்!//

    என்னுடைய வயது நான்கு என்பதை என் இப்படி வெட்ட வெளிச்சமாக ஒரு கவிதை மூலம் மக்களுக்கு தெரியப் படுத்தினீர்கள்?

    //சென்ற வருடம் வரை இந்த சித்திரை நன்னாளில் தமிழ் புத்தாண்டு அரசாங்கத்தினால் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. நம் காமிக்ஸ் உலகம் மட்டும் விதிவிலக்கா என்ன?//

    அய்யம்பாலயத்தார் தான் என்றால் நீங்களும் அரசியல் பேசுகிறீர்களே? சரி, சரி வேறு வழி இல்லை. இதனால் நானும் என்னுடைய பதிவில் இதைப் பற்றி எழுதி விடுகிறேன்.

    //1985 – ராணி#020 – ராட்சத பல்லி!
    1986 – ராணி#044 – மந்திர மண்டலம்
    1987 – ராணி#068 – மர்ம வீரன்!//
    இன்னுமொரு விஷயம் இவற்றில் இரண்டு கதைகளில் இன்ஸ்பெக்டர் ஆசாத் இரண்டாவது கதையாக இருப்பார். அதாவது தமிழ் புத்தாண்டில் லோக்கல் டச்சாம், ராமஜெயம் கலக்கி இருப்பார் அந்நாளில்.

    //நான் படித்த முதல் தமிழ் புத்தாண்டு மலர்.// என்ன ஆச்சர்யம். சேம் பின்ச்.

    //மாயாவியின் சிறுகதை ஒரு சிறந்த மொக்கைக் கதையாகும்!// ரிப்பீடேய்.

    //இது ஜட்டி போடாத சூப்பர் ஹீரோ மாயாவியின் தலைசிறந்த மொக்கைக் கதை என்பதால் பெரிதாக ஒன்றும் குடிமுழுகிப்போய் விடாது!// சரியாகச்ச் சொன்னீர்கள் போங்கள்.

    //மறைந்த திரு.முல்லை தங்கராசன் முத்துவின் ஆரம்ப காலங்களில் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்த போது அவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த கடைசி முத்து இதழ்! மீண்டும் 1982-84ல் அவர் முத்து வார மலர்-ல் பணிபுரிந்தார்!// சக்தி காமிக்ஸ்'ஐ மறந்து விட்டோமோ?

    //முத்துவின் 200-வது இதழ் பற்றிப் பேசினாலே எனக்குக் கடுப்பாகிறது!// அதைப் பற்றி நீங்கள் கூறியதே என்னை கடுப்பாகிறது

    //கதை:-பெரிதாக ஒன்றுமில்லை!// இதோடு கூட முடித்து இருக்கலாம்.

    //ஆச்சரியப் படத்தக்க விஷயம் என்னவெனில் இக்கதை ஆங்கிலத்தில் வெளியானது 1967-ல். முதல் PLANET OF THE APES படம் வந்தது 1968-ல். ஒரு வேளை படம் தயாராகிக் கொண்டிருக்கும்போதே அதன் விளம்பரப் பின்னனியில் புத்தகத்தை விற்று விடலாம் என FLEETWAY எண்ணியிருக்கலாம்?!!// படம் மூன்று ஆண்டுகள் தயாரிப்பில் இருந்ததாக எங்கோ படித்த நினைவு. சுட்டிய தேடிப் பிடித்து அனுப்புகிறேன்.

    //இதோ கலருக்கும், கருப்பு வெள்ளைக்குமான வித்தியாசம்! என்னதான் ஃபோட்டோஷாப்பில் ஒப்பேற்றினாலும் கருப்பு வெள்ளையில் மொக்கையாகத்தான் இருக்கிறது, இல்லையா? முழு வண்ணத்தில், தரமான வெள்ளைக் காகித்தில் இவ்விதழை வாசிப்பதே ஒரு சுகானுபவம்!//ரிப்பீடேய்

    //தமிழில் வெளிவந்த தலைசிறந்த முழு வண்ணக் காமிக்ஸ் இதுதான் என்பதில் சந்தேகமேயில்லை!// தவறு. விஷ ஊசி வேங்கப்பாவை மறந்து விட்டேர்கள். ஒலக காமிக்ஸ் ரசிகன் சண்டைக்கு வருவார்.

    //தவறாகவும் இருக்கலாம்! ஏனெனில் ஐரோப்பாவிலும் மாயாவி மிகப் பிரபலம்!// ??

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  5. கில்லாடி கிரிகிரிApril 14, 2009 at 11:48 PM

    உங்களை காமிக்ஸ் டாக்டரே என்று அழைப்பதில் தவறே இல்லை.

    தமிழ் காமிக்ஸ் உலகில் தலைவர் தான் மிகச் சிறந்த தகவல் மைய்யம் என்பதோடில்லாமல் காமிக்ஸ் பொக்கிஷங்களையும் குவித்து வைத்து உள்ளார்.

    அதனால் ஒரு எண்ணம்.

    அவருடன் இருக்கும் காமிக்ஸ் அறிவை அவரே வைத்துக் கொள்ளட்டும். காமிக்ஸ்'ஐ நாம் கொள்ளை அடிப்போம்.

    இந்த திட்டத்திற்கு நண்பர் கனவுகளின் காதலனும் துணை.

    எப்படி?

    பீ கேர்புல்.

    ReplyDelete
  6. தலைவரே,

    ஹிந்தி சீரியல் ஒன்று. ek se badkar ek என்று பெயர்.
    அதைப் போல உள்ளது உங்கள் பதிவுகள்.

    மாயாவி கதைக்கு நன்றி.

    மாயாவி இன்னமும் கிங்குதான். சூப்பர் ஸ்டார் போல அவரின் மொக்கை கதைகளுள் ஹிட் ஆகிவிடும்.

    //மறைந்த திரு.முல்லை தங்கராசன் முத்துவின் ஆரம்ப காலங்களில் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்த போது அவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த கடைசி முத்து இதழ்! மீண்டும் 1982-84ல் அவர் முத்து வார மலர்-ல் பணிபுரிந்தார்! //

    அவரது இடைப் பட்ட காலங்கள் பற்றி சொல்ல இயலுமா?

    சக்தி காமிக்ஸ் பற்றி நியாபகம் வருகிறது.

    தொடருங்கள்.

    ReplyDelete
  7. தலைவரே, பதிவில் நச்சென இருப்பது மாயாவியின் காக்டெய்ல் கலர் பக்கங்களும், ஹென்றி எனும் சுட்டியின் பக்கங்களும்.

    ஜட்டி போடாத மாயாவி இப் பதிவுக்கு திருஷ்டி படாமல் இருப்பதற்காகவா எனும் ஒர் சந்தேகம் ஏற்படுகிறது.

    சிறு வயதில் பிளனட் ஆஃப் ஏப்ஸ் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் பரம ரசிகனாக இருந்தேன்[ ஸ்டார் டிரக், பிளேக் 7, பக் ரொஜர்ஸ்- தமிழில் படிக்கவும்- பட்டில் ஸ்டார் கலக்டிக்கா என பல சீரியல்களை கருப்பு வெள்ளையில் கண்டு மகிழ்ந்தேன்].

    கில்லாடி கிரி கிரி, இப்படியா எங்கள் ரகசியத் திட்டங்களை உலகிற்கு அறிவிப்பது, இப்போது வேறு யாராவது குஷியாக ரகசிய பதுக்கறையைச் சூறையாடினாலும் பழி எங்களை அல்லவோ சேரப் போகிறது.

    சந்தேகம் என்ன விஸ்வாவின் கொள்ளுப் பேரன் கூட மாயாவியின் ரசிகரே.

    இங்கு எங்கள் தெருவில் மாயாவிக்கு சிலை வைப்பதற்கு உண்டியல் நீட்டாத குறை. சின்ன பிராப்ளம் லைட் கம்பங்களின் அருகில் சிலையை வைக்க முடியாது.

    சிறப்பான பதிவு. உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  8. நண்பரே. சிறு உதவியொன்று...

    என் நண்பியொருவர் சென்னை வருகிறார்(நேற்று புறப்பட்டுவிட்டார்). எனக்கு இரத்தப்படலம் 1-18 ஒரே புக்காக வாங்கிவர சொன்னேன். ( அதைப்பற்றி மற்றொரு காமிக் புக்கில் பார்த்தேன். இங்கு ஆர்டர் குடுத்து 4 மாசமாகுது கப்பல் வரலயாம். விகடன் கூட வருவதில்லை. நெட்டில்தான் படிக்கிறேன்) சென்னையில் எங்கெல்லாம் வாங்கலாமென சொல்வீர்களா? ( அல்லது பாண்டிச்சேரியில். அவங்க அங்கயும் போறாங்க )

    மற்றும் அது போல பெரிய( புக்காகவிருக்கும்) கதைகள் வேறேன்ன்ன இருக்கிறதென உங்கள் ரெகமண்டேசன் பெறும் காமிக்ஸ் கதைகளையும் சொவீர்களா?

    முன்னர் டெக்ஸ் வில்லரின் பழி வாங்கும் புயல் படித்தேன். அதன் மறுபதிப்பு இப்ப கடைகளில் கிடைக்குமா?

    இப்படியான பெரிய ஒரே கதையைக்கொண்ட காமிக்ஸ் எல்லாம் ஒரே கடையில் வாங்க எங்கு செல்ல வேண்டும் ? ( முக்கியமாக கௌபாங் கதைகள் ( டெக்ஸ்இன் கதைகள்)

    மிக்க நன்றிகள்
    சுபாஷ்

    ReplyDelete
  9. உங்கள் பின்னுட்ட விதிகளை மீறவில்லை யென நினைக்கிறேன். மீறியிருப்பின் மன்னிக்கவும்

    ReplyDelete
  10. பயங்கரவாதி நண்பா, இதெல்லாம் வச்சு தினம் ஒரு போஸ்ட் போட்டா ஒரு மாசம் காலம் தள்ளலாமே... ஏன் இப்படி..

    ReplyDelete
  11. தலைவர் அழிவுப்பணியில் பிஸியாக இருப்பதால் அவர் சார்பில் சுபாஷுக்கு நான் பதில் கூறுகிறேன்.

    //இரத்தப்படலம் 1-18 ஒரே புக்காக வாங்கிவர சொன்னேன். ( அதைப்பற்றி மற்றொரு காமிக் புக்கில் பார்த்தேன். இங்கு ஆர்டர் குடுத்து 4 மாசமாகுது கப்பல் வரலயாம்// அந்தப் புத்தகம் இன்னமும் வரவில்லை நண்பரே. செப்டம்பர் மாதத்தில் வரும் என்று நினைக்கிறேன். மேல் விவரங்களுக்கு 04562 - 272649 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். சிவகாசி லயன் காமிக்ஸ் அலுவலக தொலைபேசி எண் அது.

    //சென்னையில் எங்கெல்லாம் வாங்கலாமென சொல்வீர்களா?// சென்னையில் மயிலாபூரில் லயன் காமிக்ஸ் டிஸ்டிரிபியுடர் அலுவலகம் உள்ளது.

    //மற்றும் அது போல பெரிய( புக்காகவிருக்கும்) கதைகள் வேறேன்ன்ன இருக்கிறதென உங்கள் ரெகமண்டேசன் பெறும் காமிக்ஸ் கதைகளையும் சொவீர்களா?// நண்பரே, கடந்த பத்து ஆண்டுகளாக வந்த லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் இதழ்கள் நூற்றிக்கும் மேற்பட்டவை அவர்களின் சிவகாசி அலுவலகத்தில் விற்பனைக்கு உள்ளன.அவற்றில் பதினைந்து ஸ்பெஷல் புத்தகங்களும் உள்ளன. வாங்கி மகிழுங்கள்.

    //முன்னர் டெக்ஸ் வில்லரின் பழி வாங்கும் புயல் படித்தேன். அதன் மறுபதிப்பு இப்ப கடைகளில் கிடைக்குமா?// அதன் மறுபதிப்பு இன்னும் வர வில்லை நண்பரே.

    //இப்படியான பெரிய ஒரே கதையைக்கொண்ட காமிக்ஸ் எல்லாம் ஒரே கடையில் வாங்க எங்கு செல்ல வேண்டும் ? ( முக்கியமாக கௌபாங் கதைகள் ( டெக்ஸ்இன் கதைகள்)// கௌபாய் ஸ்பெஷல் ஒன்று ருபாய் நூறு விலையில் வந்தது. அதனியாயும், லயன் ஜாலி ஸ்பெஷல் என்று நூறு ரூபாயில் வந்த இன்னுமொரு புத்தகத்தயும் வாங்குங்கள்.

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  12. இந்த அட்டை படங்களை எல்லாம் (ராணி காமிக்ஸ், காமிக்ஸ் கிளாசிக்ஸ் நீங்கலாக) மற்ற எந்த ஒரு அட்டை படத்தையுமே நான் பார்த்தது இல்லை.

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். (வடிவேலு பாணியில் படிக்கவும்).

    அற்புதமான பதிவு.

    பல நாட்கள் வராமல் இருந்து ஒரே வாரத்தில் இரண்டு பதிவு என அசத்துகிறீர்கள்.

    வேறென்ன பதிவுகள் காத்து இருக்கின்றன? கோடை மலரை தவிர?

    ReplyDelete
  13. கில்லாடி கிரிகிரிApril 15, 2009 at 7:54 PM

    ஷங்கர்,

    //இப்போது வேறு யாராவது குஷியாக ரகசிய பதுக்கறையைச் சூறையாடினாலும் பழி எங்களை அல்லவோ சேரப் போகிறது// நீங்களே ஐடியா குடுக்கிறீர்களோ? என்ன கொடுமை சார் இது?

    கில்லாடி கிரிகிரி.

    ReplyDelete
  14. பதில்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி கிங் விஷ்வா அவர்களே. பாவம் அந்த நண்பி இரத்தப்படலம் தேடி அலையுமுன் சொல்லிவிடவேண்டும்.

    மீண்டும் மனமார்ந்த நன்றிகள் தலைவா
    அன்புடன் சுபாஷ்

    ReplyDelete
  15. Dear Doctor,

    I do not know what kind of stick are going to give about issue 200, but please be gentle. I have to take part of the blame.

    The list was prepared by me, before I have met all the other knowledgeable friends and before my collection has come to a shape. What happened was, I prepared the list with whatever issues I had in hand and I have cross checked with RT Murugan(this was some time in 2002/03). Then I have sent this list to Mr Vijayan asking him whether the list is correct or not. I did not get a reply from him, but I was surprised to see the incorrect list published in 300(in 2005). Long time fans will also notice that couple of unnumbered issues were left out of the list. One issue I remember off-hand is reprint of Irandaavathu Vairakkal Enge?. So in reality, issue number 300 is actually 301/302.

    And by the way, when was Marma Surangam published. Is it part of issue 200?

    ReplyDelete
  16. பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே ,
    கபிஷ் கதை போட்டு கலக்கிவிட்டீர்கள். 2001 இல் நானும் planet of apes படம் பார்த்தேன் . ஆனால் அப்போது அப்படத்தை மிகவும் ரசித்து பாத்தேன் . படம் எனக்கு பிடித்திருந்தது .
    கொரில்லா சாம்ராஜ்யம் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இல் வரவில்லையா ?

    ReplyDelete
  17. தலைவரே,

    நல்ல பதிவு. ஆனால் அந்த கலர் படங்களை போட்டு எங்கள் தூக்கத்தை கெடுத்து விட்டீரே?

    அதுவும் கலரில் வந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று என்று வேறு கூறி வெருபெற்றுகிறீர்கள். என்னிடம் அவை ஒன்று கூட இல்லை.

    ஒரு விஷயம் கவனித்தீர்களா? இந்திரஜால் காமிக்ஸ் கலருக்கும் இந்த முத்து காமிக்ஸ் கலருக்கும் உள்ள வித்தியாசத்தை? முத்து இஸ் ராக்கிங்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  18. தலைவரே,

    இன்னுமொரு சந்தேகம். என்னிடம் இந்த முத்து காமிக்ஸ் இல்லாததால் வருகிறது.

    உண்மையிலேயே இவை இந்த அளவுக்கு நன்றாக உள்ளனவா இல்லை நீங்கள் photoshop மூலம் அவற்றை ஒப்பேற்றி இருக்கிறீரா? ஆம் என்றால் கூறுங்கள். இந்த இந்திரஜால் காமிக்ஸ் புத்தக ஸ்கான்களை என்ன செய்தாலும் ஒப்பேற்ற முடியவில்லை.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  19. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி! இதோ உங்களின் கேள்விக்கனைகளுக்கு எனது பதிலடி புல்லெட்டுகள்!

    தமிழ் காமிக்ஸ் வலையுலகின் ‘முடி’சூடிய மன்னன் கிங் விஸ்வா அவர்களே,

    //என்னுடைய வயது நான்கு என்பதை என் இப்படி வெட்ட வெளிச்சமாக ஒரு கவிதை மூலம் மக்களுக்கு தெரியப் படுத்தினீர்கள்?//

    யோவ், மனசாட்சியே இல்லாத மனுஷா! கம்முன்னு நான் ஒரிஜினலா போட்ட வசனத்தப் போட்டிருந்தா நீயும் ஒழுங்கா அடங்கியிருப்பே!

    //இன்னுமொரு விஷயம் இவற்றில் இரண்டு கதைகளில் இன்ஸ்பெக்டர் ஆசாத் இரண்டாவது கதையாக இருப்பார். அதாவது தமிழ் புத்தாண்டில் லோக்கல் டச்சாம், ராமஜெயம் கலக்கி இருப்பார் அந்நாளில்.//

    தகவலுக்கு நன்றி!

    //சக்தி காமிக்ஸ்'ஐ மறந்து விட்டோமோ?//

    மறக்கவில்லை! விரைவில் தகவல்கள் வழங்கிவிட்டால் போயிற்று!

    //படம் மூன்று ஆண்டுகள் தயாரிப்பில் இருந்ததாக எங்கோ படித்த நினைவு. சுட்டிய தேடிப் பிடித்து அனுப்புகிறேன்.//

    தம்பி, டீ இன்னும் வரல!

    சுபாஷின் கேள்விக்கனைகளுக்குப் பொருத்தமாக பதிலளித்தற்கு நன்றிகள்!

    கில்லாடி கிரிகிரி,

    //பீ கேர்புல்.//

    இத உனக்கு நீயே சொல்லிக்கிட்டதுதானே!

    டேய், நான் யாருன்னு உனக்குத் தெரியும்! நீ யாருன்னு எனக்குத் தெரியும்! நம்ம ரெண்டு பேரும் யாருன்னு ஜனங்களுக்கு நல்லாவேத் தெரியும்!

    காமிக்ஸ் பிரியன் திரு.க.கொ.க.கூ. அவர்களே,

    //அவரது இடைப் பட்ட காலங்கள் பற்றி சொல்ல இயலுமா?//

    பல பதிவுகள் தேவைப்படும்! படித்திட நீங்கள் பொறுமையோடிருந்தால் பதிவிட நான் எப்போதும் தயார்! மேல் விபரங்களுக்கு அய்யம்பாளைத்தார்-ஐ அணுகவும்!

    அயல் நாட்டு அ.கொ.தீ.க. தலைவர் திரு.கனவுகளின் காதலர் அவர்களே,

    //இங்கு எங்கள் தெருவில் மாயாவிக்கு சிலை வைப்பதற்கு உண்டியல் நீட்டாத குறை. சின்ன பிராப்ளம் லைட் கம்பங்களின் அருகில் சிலையை வைக்க முடியாது.//

    அதனால என்ன? வழக்கம் போல நட்டநடுரோட்டுல வச்சுட்டாப் போச்சு!

    சுபாஷ்,

    கிங் விஸ்வாவின் பதில்கள் பயனுடையதாக இருப்பின் மகிழ்ச்சியே! தங்கள் வேட்டை வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    அண்ணன் SUREஷ் அவர்களே,

    //பயங்கரவாதி நண்பா, இதெல்லாம் வச்சு தினம் ஒரு போஸ்ட் போட்டா ஒரு மாசம் காலம் தள்ளலாமே... ஏன் இப்படி..//

    நம்மெல்லாம் எக்ஸாமுக்கு முந்தின நாளு ஒட்டுமொத்தமா எல்லாத்தையும் சேத்து வச்சுப் படிச்சுப்(?!!) பாஸானவனுங்க! நம்மளப் போய் டெய்லி படிக்க (பதிக்க) சொல்றீங்களே!

    அன்பிற்குரிய திரு.அம்மா ஆசை விசிறி அவர்களே,

    //வேறென்ன பதிவுகள் காத்து இருக்கின்றன? கோடை மலரை தவிர?//

    அதெல்லாம் சஸ்பென்ஸ்!

    பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய திரு.முத்து விசிறி அவர்களே,

    //Long time fans will also notice that couple of unnumbered issues were left out of the list. One issue I remember off-hand is reprint of Irandaavathu Vairakkal Enge?. So in reality, issue number 300 is actually 301/302.//

    மொத்தம் 4 இதழ்களுக்கு எண் வரிசை இல்லை. ஆகவே முத்து#300 உன்மையில் முத்து#304 ஆகும்!

    //And by the way, when was Marma Surangam published. Is it part of issue 200?//

    முத்து#200 மர்மச் சுரங்கம் தான்! கடைகளில் கூடவே கொரில்லா சாம்ராஜ்யமும் கிடைத்தது! இரு இதழ்களின் பின்புறமும் முத்து 200-வது இதழ் என இருக்கும்! அப்போது (1991-92) முத்துவின் ட்ரெண்ட் என்னவென்றால் ஒரு புதுக்கதையுடன் ஒரு மறுபதிப்பும் வெளிவரும்! விடுமுறையில் மறுபதிப்புகள் இரட்டிப்பாகும்! இதில்தான் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் ஏதேனும் கோட்டை விட்டிருக்க வேண்டும்! இன்னும் பக்கா லிஸ்ட் தயாராகவில்லை! ரெடியானதும் அனைவருக்கும் தெரியப்படுத்திடுவோம்!

    தோழர் திரு.லக்கி லிமட் அவர்களே,

    //கொரில்லா சாம்ராஜ்யம் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இல் வரவில்லையா ?//

    இது வரைக்கும் இல்லை!

    ஃபுல் டவுன்லோடு போடும் திரு.புலா சுலாகி அவர்களே,

    //உண்மையிலேயே இவை இந்த அளவுக்கு நன்றாக உள்ளனவா இல்லை நீங்கள் photoshop மூலம் அவற்றை ஒப்பேற்றி இருக்கிறீரா?//

    சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்! கொரில்லா சாம்ராஜ்யத்தின் வண்ணங்கள் அதியற்புதமாக இருக்கும்! இந்திரஜால் (ஆரம்ப காலத்தில் 60களில் வந்ததைத் தவிர்த்து) எல்லாம் பிச்சையெடுக்கனும்!

    பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்! மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  20. From The Desk Of Rebel Ravi:

    Bayangaravadhi Dr 7,

    you must be the envy of many comics fans with such an array of rarest books.

    you seem to be having such rare books that many of us may never ever would have even heard about.

    can you do a posting of muthu comics issue no 1, 50, 100, 150, 200 (still want to know your feelings),250 and 300? amy be all in one post also.

    and also a review of all the steel claw stories that appeared in muthu comics?

    Jai Ho.
    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  21. //சந்தேகம் என்ன விஸ்வாவின் கொள்ளுப் பேரன் கூட மாயாவியின் ரசிகரே.//

    very true.

    ReplyDelete
  22. forgot to say that your writing style is very very much like a flowing river. keep it up.

    any idea of writing about mullai thangarasans own mayavi stories?

    ReplyDelete
  23. ரெபெல் ரவி

    //can you do a posting of muthu comics issue no 1, 50, 100, 150, 200 (still want to know your feelings),250 and 300? amy be all in one post also. and also a review of all the steel claw stories that appeared in muthu comics?//

    கண்டிப்பாக முயலுகிறேன்! கொஞ்சம் லேட்டாகும்! அவ்வளோதான்!

    பாட்ஷா மாணிக் பாட்ஷா

    //any idea of writing about mullai thangarasans own mayavi stories?//

    ஏற்கெனவே ஆங்கிலத்தில் இங்கே எழுதியுள்ளேன்! நீங்கள் விரும்பினால் தமிழில் மீள்பதிவிடலாம்!

    //forgot to say that your writing style is very very much like a flowing river. keep it up.//

    அப்படியே இந்தக் கமெண்ட போட்டதுக்கு நான் உங்களுக்கு ஒரு சிங்கிள் டீ கூட வாங்கித்தரலேங்கறதையும் தெளிவு படுத்தீருங்களேன்! ஏன்னா, சில பொறாமைக்கண் துராத்மாக்கள் சந்தேகப் படுகின்றன!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!